உதட்டில் முத்தம் கொடுத்த நடிகரை அண்ணா என்று அழைத்த நடிகை! வெடித்தது சர்ச்சை!

உதட்டில் முத்தம் கொடுத்து நடித்த நடிகர் ஒருவரை நடிகை ஒருவர் அண்ணா என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழில் வெளியான வேதா விக்ரம் படத்தில் சிறப்பாக நடித்து இருப்பவர் ஷ்ரதா ஸ்ரீநாத். இவர் தற்போது கன்னடம் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். நான் ஈ திரைப்படம் மூலம் கவனத்தைப் பெற்ற நடிகர் நானியுடன் ஜெர்சி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளார்  ஷ்ரதா ஸ்ரீநாத். இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. ட்ரெய்லர் வெளியான உடன் அனைவரும் உற்சாக ஆர்ப்பரிப்பு செய்தனர். ஒரு காட்சியில் நாயகன் நானி நாயகி ஷ்ரதா ஸ்ரீநாத் துக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.

ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு பேசிய நடிகை ஷ்ரதா, தான் சிறப்பாக தெலுங்கு பேசி நடிப்பதற்கு தன்னுடன் நடித்த ஹீரோ நானி தான் காரணம் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ரசிகர்கள் எப்படி நானியை வெறும் பெயரைச் சொல்லி கூப்பிடலாம் மரியாதையாக கூப்பிட வேண்டும் என்று கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து தான் சிறப்பாக தெலுங்கு பேசியதற்கு நானி அண்ணா தான் காரணம் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார் ஷ்ரதா. திரைப்படத்தில் உதட்டில் முத்தம் கொடுத்து நடித்து விட்டு நிஜ வாழ்க்கையில் அண்ணா என்று எப்படி ஒரு நடிகரை கூப்பிடலாம் என்று சர்ச்சை வெடித்துள்ளது.