பிரசவத்திற்கு பிறகு 12 கிலோ உடல் எடை அதிகரிப்பு! ஆனால்? நம்பிக்கையோடு ஹேமா ராகேஷ் செய்த செயல்..!

இந்த வருஷத்துல நினைச்ச பல விஷயங்கள முடிச்சிருந்தாலும் ரொம்ப முக்கியமா நான் நினைக்கிறது எடை குறைப்பு.


பிரசவத்துக்கு அப்புறம் 12 கிலோ எடை கூடியிருந்தேன். ஒரு வருஷம் எந்த முயற்சியும் எடுக்கல. ஏன்னா பிரசவத்துல இழந்த சக்தியை மீட்டெடுக்கிறது ரொம்ப முக்கியம். கூடுதலாகவே சத்தான உணவுகள் எடுத்துக்கிட்டேன். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் குண்டாயிடிங்க.. இனி மேல் ஸ்கீரின்ல பழைய மாதிரி வரமுடியுமா..

பிரசவத்துக்கு கூடின எடைய குறைக்க முடியாது.. ஸ்கீரின்ல பெருசா தெரியுறிங்க. நியூஸ் படிக்கிறத குறைச்சுகலாமே? இனிமேல் இந்த எடை தான் நிரந்தரம்.. சிசேரியன் னால காலம் முழுக்க இடுப்பு, முதுகு வலிக்கும்.. பழைய மாதிரி இருக்க முடியாது.. இன்னும் Bla.. Bla.. அட்வைஸ், கேலி, கிண்டல்கள் முதுகிற்கு பின்னால் எடை குறித்த சீண்டல்கள்.


எல்லாத்துக்கும் என்கிட்ட இருந்து சிரிப்பு தான் பதிலா வந்தாலும் மனசளவுல கஷ்டமா தான் இருந்தது. ஆனா முயற்சி செஞ்சா முடியாதது எதுவும் இல்லல. எடையை குறைக்கனும் னு முடிவு பண்ணதும் எல்லா டயட் பத்தியும் படிச்சேன். எதுலயும் திருப்தி இல்ல. ஏன்னா குறிப்பிட்ட உணவுகளை மட்டும் தொடர்ந்து எடுக்கிறது, பிடிச்ச உணவுகளை ஒரேடியா விட்டு கொடுக்கிறது, மனசளவுல உணவுக்கு ஏங்கிட்டு டயட் னு சொல்லி பிடிக்காத உணவுகளை கடுப்பா சாப்பிடுறது னு உடம்ப வருத்திக்க இஷ்டம் இல்ல.

ரோட்ல போறப்ப காபி ஸ்மெல் வந்தாலே அந்த இடத்துலயே ஒரு காபி குடிச்சுட்டு நினைச்சா புடிச்சத சாப்பிடற ஆளு நானு. புடிச்சத சாப்பிடனும்.. ஆனா பேலன்ஸ்டு டயட் ஆ இருக்கனும்.. உணவுக்கு ஏற்ற உடல் உழைப்பு இருக்கனும். கூடுதலா கலோரிகள் சாப்பிட்டா கூடுதலா உழைச்சு கலோரிகளை எரிக்கனும், இருக்கிற கொழுப்பை குறைக்க உணவுமுறையில சில மாற்றங்கள செய்யனும். Sarav Urs மருத்துவ பதிவுல படிச்சுட்டு எனக்கான நேரத்தை ஒதுக்க ஆரம்பிச்சேன்.


திரும்பவும் ஜிம்ல சேர்ந்து எனக்குனு சில மாதங்களுக்கு மட்டும் தனி பயிற்சியாளர் கேட்டு, என் உடல் ஏத்துக்கிற பயிற்சிகளை மட்டும் பண்ண ஆரம்பிச்சேன். உணவுமுறையில மதியம் அரிசி உணவுக்கு பதிலா வாரம் 5 நாள் சிறுதானிய உணவுகள், தினமும் காய்கறி, நட்ஸ், முட்டை, சர்க்கரை ஐஸ் இல்லாத ஜீஸ், சர்க்கரை தேவைப்படுற இடங்கள்ல நாட்டு சர்க்கரை, வாரம் 1 ஒரு முறை அசைவம் காலை, இரவு வழக்கம் போல இட்லி, தோசை உணவு முறையை கொஞ்சம் மாத்தினேன். ஆனா அப்பப்போ விருப்படுற உணவை சாப்பிட்டேன். பொறிச்ச உணவுகளை அதிகம் சாப்பிட்டா அடுத்த நாள் அதிகம் Work Out.

இதுக்கு நல்ல பலன் கிடைச்சது. வெறும் ஜிம் மட்டுமே போதாது , ஏதாவது டார்கெட் வச்சு உடற்பயிற்சி பண்ணா உற்சாகமா இருக்கும்னு மாரத்தான் ஓடினேன். மாரத்தான் ஓடனுமேனு ரெகுலரா ஜிம் பயிற்சிக்கும் போனேன். தொடர் பயிற்சியால இப்ப ஒரு வருடத்துல 9 கிலோ எடை குறைச்சேன்.

இந்த ஒரு வருஷத்துல கத்துக்கிட்டது என்னனா எல்லாருக்கும் எல்லாமே செட் ஆகாது. நம்ம உடம்புக்கு என்ன செட் ஆகுமோ அத மட்டும் சரியா பண்ணா நம்ம ஆரோக்கியதுக்கு நல்லது. மனசுக்கும் தான் டெங்குக்கு அப்புறம் இன்னும் உடற்பயிற்சிக்கு போகல. இப்படி சோம்பேறித்தனம் வந்திடும்னுதான் அடுத்த மாரத்தானுக்கு பதிவு பண்ணிட்டேன். இப்ப அதுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கனும். இன்னும் 5 கிலோ டார்கெட் இருக்கு


கடைசியா என்ன சொல்ல வரேனா, நம்மள பத்தி அடுத்தவங்க என்ன நினைக்குகிறாங்க அப்படீன்றத விட நாம எப்படி நம்மள நினைக்கிறோம் னு முக்கியம். ஏன்னா நம்ம எண்ணங்கள் தான் நம்மள அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு போகும். முயற்சி செய்வோம்.. முன்னேறுவோம்.. சியர்ஸ் ..அட்வான்ஸ் 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.