மனைவியின் கள்ளக்காதலனுக்கு நடு ரோட்டில் சதக் சதக்! பட்டப்பகலில் நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!

ஆந்திரம் மாநிலம் விசாகப் பட்டினத்தில் ஒரு நபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யபப்ட்டது தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சோடவரம் பிரதான சாலையில் மதுக்கடை ஒன்றில் இருந்த சி.சி.டி.வி.யில் ஒரு இரு சக்கர வாகனத்தில் இருந்து இறங்கி வரும் ஹெல்மெட் அணிந்த நபர் விழுந்து கிடந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் அருகே சாலையில் கிடந்த நபரை சரமாரியாக வெட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறிச் செல்வது தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தன. 

தகவல் அறிந்து வந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இறந்த நபரின் பெயர் கோனா ராஜேஷ் என்று தெரிய வந்தது. மேலும் கொலைசெய்துவிட்டுச் சென்ற நபரின் இருசக்கர வாகன எண் மற்றும் அந்த நபர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு திரட்டிய தகவல்களின் பெயரில் சாத்தி பாபு என்ற நபர்தான் கொலை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகமுற்றனர். 

அதற்கு உரிய முகாந்திரமும் இருந்தது. போலீசாரின் விசாரணையில் ராஜேஷுக்கும் சாத்தி பாபுவின் மனைவிக்கும் தவறான தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக சாத்தி பாபுவின் வீட்டுக்கு போலீசார் சென்ற போது அந்த நபர் தனது மனைவியையும் கொல்வதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து சாத்திபாபுவை சுற்றி வளைத்த போலீசார் விசாரணை நடத்திய போது ராஜேஷை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இதையடுத்து சாத்திபாபுவை போலீசார் கைது செய்தனர்.