தஞ்சைக்கு அருகே எதர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீரென தாழ்வாக பறந்தது பார்ப்பவர்களை பீதியில் ஆழ்த்தியது, ஏதேனும் அசம்பாவிதம் ஏறபட்டு விடும் என பதட்டமடைந்தனர்.
மகன் பிறந்தநாளை ஹெலிகாப்டரில் கொண்டாடிய தொழில் அதிபர்! தாழ்வாக பறந்ததால் கும்பகோணத்தில் பீதி!
தஞ்சையில், கும்பகோணம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகன் பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தபட்டன.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை திடீரென கும்பகோணம் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. திடீரென விழா நடந்த பகுதியில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர் 3 முறை வட்டமடித்து, அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் மேலே தாழ்வாக பறந்து விழா குழுவினர் மீது மலர்களை தூவியது.
திடீரென நடந்த இந்த்க நிகழ்வினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததை பார்த்த அப்பகுதியினர் என்னவென்று தெரியாமல் பதட்டமடைந்தனர்.
மேலும் இதுகுறித்து கும்பகோணம் உதவி கலெக்டர் வீராசாமி கூறியபோது, பிறந்தநாள் விழா குழுவினரின் சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் அனுமதி முறையாக பெற்று தான் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் புறப்படும் இடம், பறக்க வேண்டிய உயரம் ஆகியவை முறையாக பின்பற்றபட்டுள்ளத்காக கூறப்படுகிறது.மேலும் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறினார்.