மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழைக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
தொடங்கிய மறுநாளே கொட்டித் தீர்க்கும் பருவமழை! ஒருவர் பலி!
தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது. இதன் முன் அறிகுறியாக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தின் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெய்தது.
குறிப்பாக, நாசிக்கில் 5 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்தது. இதில், இந்திரா நகர் பகுதியில் மழை தாங்காமல் வீடு இடிந்து விழுந்து, 70 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வீட்டில் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதேபோல, யேலோ நகரில் கனமழை காரணமாக, ஏராளமான வீடுகள் சேதமடைந்ததாக, போலீசார் தெரிவித்தனர். இதேபோல கேராள முழுவதுமே பருவமழை கொட்டி வருகிறது. தமிழகத்திலும் மேற்கு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.