பிறக்கும் போதே குழந்தையின் இதயத்தில் ஓட்டை..! மூளையில் நீர் கட்டி..! கைவிட்ட டாக்டர்கள்! அதிர்ந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிசயம்!

நியூயார்க்: இதயத்தில் ஓட்டை, மூளையில் பிரச்னை இருந்தாலும், அமெரிக்க சிறுமி ஒரு வயதை பூர்த்தி செய்து சாதித்துள்ளார்.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹாலி (24 வயது). இவர் சென்ற ஆண்டில், டிலன்  என்பவருடன் ஜாலியாக இருந்தபோது எதிர்பாராவிதமாக கர்ப்பம் தரித்தார். கருவை கலைக்க முயன்றாலும், அதற்கான காலம் கடந்துவிட்டதாக மருத்துவர்கள் கைவிரித்தனர். வேறு வழியின்றி ஹாலி கருவை சுமக்க நேரிட்டது.

இதன்படி, 13 வாரங்கள் கடந்த நிலையில் கருவில் உள்ள குழந்தையின் செயல்பாடுகளை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அதில், கருவில் இருக்கும் குழந்தைக்கு எட்வர்ட் சிண்ட்ரோம் எனும் ஜெனிட்டிக் பிரச்னை இருப்பதாக தெரியவந்தது. ஒரு வழியாக மனதை தேற்றிக் கொண்ட ஹாலி, சில வாரங்கள் கழித்து ஸ்கேன் செய்தபோது, மேலும் ஒரு அதிர்ச்சி கிடைத்தது.

ஆம், ஹார்பரின் கருவில் வளரும் குழந்தைக்கு இதயத்தில் ஓட்டையும், மூளையில் ரத்தக் கசிவும், மைக்ரோசெஃபலி (சிறிய தலை) மற்றும் குட்டையான கைகள் உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த குழந்தை பிறந்தாலும், நீண்ட நாள் உயிர் வாழ வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறவே, கடுமையாகப் போராடி குழந்தையை வேதனையுடன் ஹாலி பெற்றெடுத்தார். விரைவிலேயே இறந்துவிடும் எனக் கூறப்பட்டாலும், ஹாலி மற்றும் டிலன் ஒன்று சேர்ந்து தங்களது குழந்தையை எப்படியேனும் உயிர் வாழ வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதன்படி, தற்போது மருத்துவர்களின் கணிப்பையும் மீறி, ஹாலியின் குழந்தை ஹார்பர் தனது ஒரு வயதை நிறைவு செய்துள்ளது. இந்த பிறந்த நாளை ஹாலி தம்பதியனர் உற்சாகமாகக் கொண்டாடினர். எப்படியேனும் போராடி குழந்தையை வளர்ப்பேன் என, ஹாலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.