டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையா? அப்போ துளசி டீ குடிங்க!

நம்மில் பலருக்கு தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு.


கிராம்பு, லவங்கப்பட்டை , ஏலக்காய் , இஞ்சி, சுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் கொண்டு நாம் தேநீர் தயாரிப்போம். ஆனால் இவற்றுடன் துளசி சேர்த்து தேநீர் தயாரிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. 

இருமல், சளி, ஆஸ்துமா , நுரையீரல் அழற்சி போன்ற சுவாசம் தொடர்பான பாதிப்புகள் குறைய உதவுகிறது. இருமலைப் போக்க உதவும் தன்மைகள் மற்றும் சளி அல்லது கோழைகளை சுவாச மண்டலத்திலிருந்து அகற்றி நிவாரணம் தரும் தன்மை போன்றவை துளசியில் அதிகம் உள்ளது. ஆகவே துளசி சேர்க்கப்பட்ட தேநீர் பருகி உங்கள் சுவாச மண்டல ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கடந்து , துளசி தேநீரைப் பருகுவதால் உங்கள் உடலின் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் கூடுதலாக , துளசி தேநீர் தினமும் பருகி வருவதால் உங்கள் கொழுப்பு மற்றும் கார்போ வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது மற்றும் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை ஆற்றலாக மாற்றம் பெறுவதை உறுதி செய்கிறது. ஆகவே இனிமேல் துளசியை உங்கள் தேநீரில் கட்டாயம் இணைத்துக் கொள்ளுங்கள். நீரிழிவு நோயுள்ளவர்கள் .

உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் துளசி பல்வேறு நன்மைகளைத் தருகிறது. எனவே நீங்கள் அவசியம் துளசி இலைகளை சேர்த்து தேநீர் தயாரித்து பருகுங்கள். இனிமேல் நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் டீயை குடிப்பதை நிறுத்திவிட்டு துளசி டீ குடிக்க ஆரம்பியுங்கள்.