பப்பாளி பழத்தின் அதீத பலன்கள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, போலிக்அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு ,நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.


பப்பாளிப்பழம் செரிமான நோய்களை குணப்படுத்துவதோடு மலச்சிக்கல்களைப் போக்கும் ஆற்றல் வாய்ந்தது. இரத்தத்தில் உள்ள அமிலத் தன்மையை அகற்றும், இரத்த சோகை என்னும் நோயை குணப்படுத்தும். நமது உடலில் காயம்பட்டு வெளியேறுகின்ற இரத்தமானது உடனடியாக உறைவதற்குத் தேவையான என்ஸைம்கள் இப்பழத்தில் அடங்கியுள்ளன. கல்லீரல், மண்ணீரல் நோய்க்கு பப்பாளிப் பழமே சிறந்த உணவாகும்.

தினசரி பப்பாளியை உண்டு வந்தால் உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு இளமைப்பொலிவோடு வாழலாம். பப்பாளி தொடர்ந்து 4 வாரங்கள்சாப்பிட்டால் கொழுப்புசத்து 19.2விழுக்காடுகள் குறைகிறது. பப்பாளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். நரம்புத்தளர்ச்சிக்கு மிக நல்லது. வயதைக் குறைத்துக் காட்டக் கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு. எனவே அதிகமாக பப்பாளி உண்பதால் செல்கள் வயதாவதைக் கட்டுப்படுத்தும்.

நீரிழிவு நோய் இருப்போரும் பப்பாளியை உண்ணலாம். இதில் சர்க்கரையின் அளவும் குறைவு என்பதால் பயமின்றி தாராளமாக உண்ணலாம். சர்க்கரை அளவும் கட்டுப்பாடாக இருக்கும். ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும்.