மூங்கில் அரிசில் ஏராளமான கலோரிகள் உள்ளது. ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின். ரிபோப்ளோவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!
உடலில் இருக்கிற கொழுப்பைக் குறைக்கும்.கழுத்து வலி மற்றும் இடுப்பு வலியை சரிச்செய்யும். உடலுக்கு பலத்தையும், வீரியத்தையும் கொடுக்கும்.
உடலை எப்போதும் உரமாகவும், ஊட்டமாகவும் இருக்க உதவும். இதை தினையரிசி, சாமையரிசி ஆகியவற்றில் கலந்து சமைத்து உண்ணலாம். இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
உடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.