மணத்தக்காளி கீரையின் சாறு தீராத வயிற்று வலியையும் போக்கும்!

மணத்தக்காளி கீரையினை சாறு எடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.


இலைச்சாறு 5 தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளைகள் குடித்து வரவேண்டும். படர்தாமரை குணமாக காய்களை அரைத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பற்றாகப் போட வேண்டும் , தினமும் இரண்டு வேலளைகள் குணமாகும் வரை பற்றிட்டு வர வேண்டும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது. புதுமணத்தம்ப திகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கருத்தரிக்கச் செய்யும். உருவான கரு வலிமை பெறவும் இப் பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

உடல் இளைத்திருப்பவர்கள் மணத்தக்காளி சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட உடல் பருக்கும். தசைகளுக்குப் பலம் சேர்க்கும், கண்பார்வையை தெளிவாக்கும், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும். மலர்கள் இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகும். கனிகள் இதய நோய்களுக்கு மருந்தாக உதவுகின்றன.

மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண்,குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.