நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதிலிருந்து பல நோய்களுக்கு மருந்தாகுவது வரை பூண்டின் பலன்கள் ஏராளம்!

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.


பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். எனவே அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள், தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.

வாயுத்தொல்லைக்கு பூண்டு ஒரு சிறந்த மருந்து. எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தூங்கும் முன்னர் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால், வாயுத் தொல்லை குறையும். ஜலதோஷம், கடுமையான சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்கள் தூங்கும் முன் ஒரு பல் பூண்டை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். 

இளமையைப் புதுப்பித்துத் தருவதில் வெள்ளைப்பூண்டு சிறந்து விளங்குகிறது.. உடலின் வெப்பநிலையையும் தொடர்ந்து சீராக வைத்திருக்கிறது. இதனால் வயதானவர்கள் உடல் மற்றும் உள்ள ரீதியாகத் தினமும் இளமைத் துடிப்புடன் செயல்பட வைக்கிறது.