என்னை நன்றாக பயன்படுத்திக் கொண்டான்! இப்போது கிண்டல் செய்கிறான்! ஓரினச்சேர்க்கை விபரீதம்!

ஓரினச் சேர்க்கையில் இருந்த நண்பர்கள். ஊர் கூட்டி சொன்னதால் நண்பர் தற்கொலை.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட நண்பன் அந்த விவகாரத்தை வெளியில் சொன்னதால் ஒருவர் வீடியோ வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் சூரப்பள்ளியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கட்டிடத் தொழிலாளர்களான இருவரும் ஓசூரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருவர்களுக்குடையே ஓரினச் சேர்க்கை உறவு ஆரம்பித்துள்ளது. பின்னர் சொந்த ஊருக்கு வந்த இருவரும் அடிக்கடி வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து அதற்கான காரணத்தை வாட்ஸ் ஆப்பில் வீடியோவாக வெளியிட்டும் கடிதம் எழுதிவிட்டும் தற்கொலை செய்து கொண்டார். மணிகண்டன் உருக்கமாக பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. 

அந்த வீடியோவில் நண்பனாக பழகிவந்த மணிகண்டன் தன்னை ஓரின சேர்க்கை ரீதியாக பலமுறை பயன்டுத்திக் கொண்டதாக கூறியுள்ளார் மணிகண்டன். மேலும் இந்த அசிங்கமான விஷயத்தை என்னுடைய நண்பர்களிடம் கூறி அவமானப்படுத்தி விட்டதாக கண்ணீர் மல்க அந்த வீடியோவில் பேசியுள்ளார் மகேஷ்.

மகேஷ் தன்னைப் பற்றி கூறியதால் அனைவரும் தற்போது தன்னை கேவலமாக பார்ப்பது மட்டுமின்றி அவதூறாக பேசி கிண்டல் அடித்து பேசுவதாகவும் மனமுடைந்து கூறினார் மணிகண்டன். எனவே என்னுடைய தற்கொலைக்கு மகேஷ்தான் காரணம் என்றும் இறந்து போன பின் வந்து மகேஷை பழிவாங்குவேன் என்றும் சும்மா விடமாட்டேன் என்றும் ஆவேசமாக பேசினார் மணிகண்டன்.

மேலும் அந்த வீடியோவில் தன்னை மன்னித்துவிடுமாறு தாயிடம் பேசிய மணிகண்டன் அடுத்து ஜென்மத்தில் மகனாக வந்து பிறப்பேன் என்றும் கூறியுள்ளார். கண்ணீரும் கம்பலையுமாக மணிகண்டன் கைகளை அசைத்தபடி பாய் எனக் கூறுவதுடன் அந்த வீடியோ முடிகிறது.

இந்த வீடியோ வெளியானதைத் தொடர்ந்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதாக கருதி தற்கொலை வழக்குப்பதிவு செய்த ராஜாக்கமங்கலம் போலீசார் தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை பலமுறை உல்லாசமாக பயன்படுத்திக் கொண்ட மகஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கண்ணியத்தை மீறி வாழக்கூடாது என்பதற்காகத்தான் இறைவன் ஆணுக்கு பெண்ணும்,  பெண்ணுக்கு ஆனும் என இந்த உலகத்தில் படைத்தான். ஆனால் உடலுறவு என்பது தனிப்பட்ட சுதந்திரம் என கூறும் சிலர் அந்த  ஓரினச் சேர்க்கை உறவு சமுதாயத்திற்கு தெரிந்து அவமானப்படும்போது அமைதியாக இருக்காமல் தற்கொலை செய்து கொள்ள வேண்டியது ஏன்?