நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் தூக்கில் போடப்படும் ஹேங்மேன் இவர் தான்..! யார், எங்கு இருக்கிறார் தெரியுமா?

இதனை செய்ய நான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்


நிர்பயா கற்பழித்து கொலை செய்தவரை தூக்கில் போடும் ஹேங்மேன். துடிக்க துடிக்க கற்பழித்து கொலை செய்த நபர்களை என் கையினால் தூக்கிலிடம் சந்தற்பதிற்கு நான் நான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று கூறிய மீரட் ஊழியர் (ஹேங்மேன் ) தயார் நிலையில் உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி கோர்ட்டு நிர்பயா கற்பழித்து- கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் 22-ந்தேதிக்குள் தூக்கில் போடப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் ஜெயிலில் தீவிரமாக நடந்து வருகின்றன.

பொதுவாக கைதிகளை தூக்கில் போடுவதற்கு என்று தனியாக எந்த ஜெயிலிலும் ஊழியர்கள் நிரந்தரமாக இருப்பது வழக்கம் ஆனால் இந்தியாவில் தூக்கு தண்டனை குறைவாக போடப்படுகின்றது. இந்நிலையில், தற்காலிக ஊழியர்களை அந்த நேரத்தில் மட்டும் அழைத்து கொள்கின்றனர்.

இந்த தொழிலில், சிலர் பரம்பரையாக இந்த பணியில் ஈடுபடுவார் அவர்களைத்தான் தூக்கு தண்டனைக்கு ஈடுபடுத்துவார்கள். இதற்கிடையில், டெல்லி திகார் ஜெயிலில் இதற்கான ஊழியர்கள் இல்லை. அதே நேரத்தில் உத்தரபிரதேசம் மீரட் ஜெயிலில் பவான் ஜலாத் என்ற ஊழியர் இருக்கிறார். இவருடைய குடும்பத்தினர் 4 தலைமுறையாக தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இவர மீரட்டில் பவான் ஜலாத் சைக்கிளில் பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், 4 குற்றவாளிகளையும் தூக்கில் போட தயாராக இருக்கும்படி ஏற்கனவே கடந்த மாதம் 16-ந்தேதி மீரட் ஜெயில் நிர்வாகத்தினர் அவரிடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை குறித்து, சம்பந்தமாக பவான் ஜலாத்திடம் கேட்ட போது அவர் இந்த 4 குற்றவாளிகளையும் தூக்கில் போடும் இந்த பணியை செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். இது போன்ற கொடிய குற்றவாளிகளை கொல்வதன் மூலம் சமுதாயத்துக்கு அழுத்தமான ஒரு செய்தியை சொல்வதாக அமையும்.

மேலும், அவர் இதனை செய்ய நான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். இதனை நான் செய்வதால் அந்த பெண்ணிற்கு நீதி கிடைக்கும், அதுமட்டுமின்றி அவர்கள் பெற்றோர்கள் மனம் சாந்தி அடைவர்கள் இதனை செய்ய நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

நிதாரி கொலை வழக்கு குற்றவாளி, சுரேந்தர் கோலியை தூக்கில் போடுவதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை அழைத்தார்கள். ஆனால், அந்த தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டதால் அந்த தண்டனை நிறை வேற்றப்படவில்லை. ஆனால், பவான் ஜலாத் இதுவரை யாரையும் தூக்கில் போட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.