விராட் கோலியின் சாதனையை தகர்த்த தெ. ஆப்ரிக்க வீரர்!

பாகிஸ்தானிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹாசிம் ஆம்லா சதம் அடித்தார். இந்த சதத்தின் மூலம் குறைந்த போட்டிகளில் 27வது சதத்தை அடித்து விராட் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.


விராட் கோஹ்லி தனது 169வது போட்டியில் 27வது சதத்தை நிறைவு செய்தார். அனால் ஹாசிம் ஆம்லா தனது 167வது போட்டியிலேயே 27வது சதத்தை நிறைவு செய்து கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னதாக சச்சின் டெண்டுல்கர் தனது 254வது போட்டியில் 27 வது சதத்தை நிறைவு செய்ததே சாதனையாக இருந்தது. இவரது சாதனையை விராட் கோஹ்லி முறியடித்தார். இப்பொழுது கோஹ்லியின் சாதனையை ஹாசிம் ஆம்லா முறியடித்துள்ளார்.

ஹாசிம் ஆம்லா பாகிஸ்தானிற்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 120 பந்துகளில் 108 ரன்கள் எடுத்தார். இவர் சதம் அடித்து சாதனை செய்திருந்தாலும் அந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹபீஸ் அதிரடியாக விளையாடி 63 பந்துகளில் 71 ரன்களை எடுத்து பாகிஸ்தான் வெற்றிக்கு வழி வகுத்தார். சிறப்பாக விளையாடிய ஹபீஸுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி வரும் 22ம் தேதி டர்பனில் தொடங்கவுள்ளது.