இளசுகளை குறி வைக்கும் வாட்ஸ்ஆப் விபச்சார குழு! 1 மணி நேரத்துக்கு ரூ.2000!

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அப்பகுதியில் பாலியல் தொழில் நடந்து வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து அங்குள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 24 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் 6 பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


குருகிராம் பகுதியில் ராஜீவ் யாதவ் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள  பெரிய கட்டிடத்தை வாடகைக்கு பிடித்து தொழில் நடத்தி வந்துள்ளார்.இந்நிலையில் அங்கு இரவு பகலாக பல நபர்கள்  வந்துபோவதாக அருகிலுள்ள உள்ளவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மற்றும் அப்பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று துர்கா சக்தி பாலியல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அப்போது அந்த குடியிருப்பில் இருந்த 24 நபர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் ஹரிஷ் மற்றும் போஜ்ராஜ் என்ற நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது போஜ்ராஜ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக அந்த குடியிருப்பில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அங்கு வரும் நபர்களிடம் ஒரு பெண்ணிற்கு ஒருநாள் கூலியாக 2000 முதல் 5000 வரை வசூலித்து வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். மற்றும் இந்தத் தொழிலை பிரபலப்படுத்த வாட்ஸ் ஆப் குரூப் செயலியை பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதற்காகவே ஒரு குரூப் கிரியேட் செய்யப்பட்டு அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவருமே டெல்லி பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதில் மூவர் மட்டுமே குர்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றும் அந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு சீல் வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது