முதலில் சைக்கிள்! பிறகு பைக்! அப்புறம் கார்! தாறுமாறாக ஓடிய காரால் சாலையில் ஏற்பட்ட கோரம்! வைரல் வீடியோ உள்ளே!

அரியானா மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.


அரியானா மாநிலத்தில் சாலை ஒன்றில் கடந்த 11ம் தேதி வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் மாலை 4 மணியளவில் அசுர வேகத்தில் ஒரு கார் வந்தது. அந்த கார் வரும் வேகத்தை பார்த்தால் கட்டுப்பாட்டை இழந்து ஓடுவது போல் இருந்தது. சாலையில் தாறுமாறாக சென்ற கார் முதலில் சைக்கிள் மீது மோதியது

பின்னர இடதுபுறம் சென்றுகொண்டிருந்த மோட்டார் பைக் மீது மோதியது. மீண்டும் வலதுபுறம் நடைமேடையில் இருந்த கார் மற்றும் மற்ற வாகனங்கள் மீது மோதி நின்றது. நல்வாய்ப்பாக அங்கு பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்ச்சேதம் இல்லை. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

அதே சமயம் உண்மையிலேயே அந்த கார் ரிப்பேர் ஆகி அப்படி சென்றதா? அல்லது கார் ஓட்ட தெரியாமல் யாராவது ஓட்டி வந்தார்களா? அல்லது, குடிபோதையில் கார் ஓட்டினார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.