தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் சிக்கிய ஹரி நாடார்! கதிகலங்கிப் போன தமிழிசை!

தூத்துக்குடியில் துப்பாக்கியுடன் ஹரி நாடார் சிக்கியுள்ளதால் பாஜக வேட்பாளர் தமிழிசை கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


நாடார் மக்கள் சக்தி இயக்கம் எனும் அமைப்பின் தலைவராக இருப்பவர் ஹரி நாடார். இவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார்.விமான நிலையத்திலிருந்து காரில் ஏறி நெல்லை சாலையில் ஹரி நாடார் சென்று கொண்டிருந்தார். அப்போது தேர்தல் பறக்கும் படையினர் ஹரி நாடார் என் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

காருக்குள் ஒரு துப்பாக்கியும் 35 தோட்டாக்களும் இருப்பதைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில் தன்னுடைய நண்பரான உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நரேந்திர சிங் யாதவ் என்பவரின் துப்பாக்கி இது என்று தெரிவித்து தன் அருகில் இருக்கும் ஒரு நபரை அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் ஹரி நாடார்.

அந்த நபர் தன்னுடைய பெயர் நரேந்திர சிங் யாதவ் என்று கூறியுள்ளார். மேலும் முன்னாள் ராணுவ வீரரான தான் அறிஞரின் பாதுகாப்புக்காக வந்துள்ளதாக கூறி அதிகாரிகளை அதிர வைத்துள்ளார்.

ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி இல்லை என்று கூறி ஹரி நாடார் அவருடன் முன்னாள் ராணுவ வீரர் ஆகியோரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் அதிகாரிகள். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேசமயம் ஹரி நாடார் வந்தாலும் அவர் காரில் இருந்த துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நெல்லையில் கராத்தே செல்வின் நினைவு தினத்தில் கலந்து கொள்வதற்காக தான் தூத்துக்குடி வந்து காரில் சென்று கொண்டிருப்பதாக விசாரணையின்போது ஹரி நாடார் கூறியுள்ளார்.

ஆனால் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசையின் தேர்தல் பணிகளை கவனிக்க ஹரி நாடார் அங்கு வந்ததாக ஒரு தகவல் உலவுகிறது. இது குறித்து அறிந்த தமிழிசையும் கலக்கத்தில் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.