தமிழ்நாட்டிலும் வன்முறைக்கு ஆசைப்படுகிறாரா ஹெச்.ராஜா..?

டெல்லி கலவரம் குறித்து நாடெங்கும் மக்கள் பதறிக்கொண்டு இருகும்போது, டெல்லி போன்று சென்னையின் வண்ணாரப் பேட்டையிலும் ஒரு கலவரம் நிகழவேண்டும் என்பது போன்று ஒரு ட்வீட் போட்டு பலரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறார் ஹெச்.ராஜா.


ஆம், இன்று அவர் போட்டிருக்கும் டிவீட்டில், ‘டில்லியில் நடப்பது வண்ணாரப் பேட்டையில், தமிழகத்தில் ஏற்படலாம். வண்ணாரப் பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல் துறையினர் மீது கற்களையும் செருப்புகளையும் வீசினார்கள் என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

பா.ஜ.க. எம்.பி. பேசிய ஒரு பேச்சுத்தான் டெல்லி கலவரத்துக்குக் காரணம் என்று கூறப்படும் நிலையில், தமிழகத்திலும் அப்படியொன்று ஏற்பட வேண்டும் என்பது போலவே கூறியிருக்கிறார் ஹெச்.ராஜா. இவர் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எப்படி மதிப்பு கொடுப்பார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

ஆனாலும், இவரை கைது செய்து சிறையில் போட்டால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் என்று பா.ஜ.க.வினரே கோரிக்கை வைக்கிறார்கள். செய்வீர்களா.. நீங்கள் செய்வீர்களா?