சைக்கோ மிஷ்கினுக்கு எதிராக களம் இறங்கும் ஹெச்.ராஜா..! தேச துரோகி பஞ்சாயத்து ஆரம்பம்.

சைக்கோ படத்தில் லாஜிக் இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன என்று இயக்குனர் மிஷ்கினை சமூக வலைதளங்களில் பலரும் கலாய்த்து தள்ளுகிறார்கள். இதற்கு விடை கொடுப்பது போன்று பேசிய மிஷ்கின், தேவை இல்லாமல் ராமாயணத்தை வம்புக்கு இழுத்தார்.


அடுத்தவன் பொண்டாட்டியைத் தூக்கி வந்துவிட்டு, நியாயம் இருக்கிறது என்று சண்டை போடுகிறான் ராவணன். அதில் என்ன லாஜிக் இருக்கிறது? அடுத்து கும்பகர்ணன் வந்து ராவணன் எனக்குச் சாப்பாடு போட்டார் என்று அவருக்கு ஆதரவாகச் சண்டை போடுகிறார். அதிலும் லாஜிக் இல்லை.

இறுதிப் போரில் ராவணனிடம் இருந்த அத்தனை ஆயுதங்களும் தீர்ந்து போகின்றன. அப்போது ராமன் 'இன்று போய் நாளை வா' என்று ராவணனிடம் சொல்கிறான். அதிலும் லாஜிக் இல்லை' என்று குறிப்பிட்டார் 

இவ்வளவு போதாதா? ராமனுக்கு ஒன்று என்றால் ஹெச்.ராஜாவால் தாங்க முடியுமா என்ன? தேசத் துரோகி, மதத் துரோகி என்று மிஷ்கினுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஹெச்.ராஜா. இன்று அவர் ட்விட்டர் பதவில், "ராமாயணத்தை இழிவாகப் பேசிய 'சைக்கோ' சினிமா இயக்குநர் மிஷ்கினின் செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இந்து மதத்தின் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது" என்று தெரிவிச்சிருக்கார்.

அதான, படம் சரியா ஓடலையாம், எப்படியாவது பரப்பரப்பாக்கி ஓட வையுங்க. ஆன்டி இன்டியன்ஸ்.