காதலியின் நெற்றியில் நான்கு முறை துப்பாக்கியால் சுட்ட ஜிம் டிரெய்னர்! பிறகு டாக்சி டிரைவர்! ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்!

பெண் தோழி மற்றும் டாக்சி டிரைவர் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய ஜிம் உரிமையாளரை குஜராத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.


ஹேமந்த் லம்பா என்பவர் டெல்லியில் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு 22 வயதான பெண் தோழி ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இருவரும் ஹரியானாவிற்கு சென்றுள்ளனர். அங்கு பெண் தோழியை நெற்றியிலே நான்கு முறை சுட்டுக் கொன்றுவிட்டு உடலை அடையாளம் தெரியாதவாறு தூக்கி வீசியுள்ளார் ஹேமந்த். 

பின்னர், தனது துப்பாக்கி முனையில் டாக்சி டிரைவரை ஜெய்ப்பூரில் இறக்கி விடுமாறு மிரட்டியிருக்கிறார். ஜெய்பூர் சென்றடைந்த உடனே டாக்சி டிரைவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு பின்னர் காரை குஜராத் எடுத்துச்சென்றுள்ளார். 

குஜராத்தில் கார்களை வாங்கி விற்கும் ஒருவரிடம் பேசி எடுத்துவந்த காரை ஹேமந்த் விற்க முயற்சித்துள்ளார். முதலில் சிறு சந்தேகம் அடைந்த விற்பனையாளர் காரில் இருக்கும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது, டாக்சி டிரைவரின் மனைவி போனை எடுத்து தனது கணவர் காணவில்லை என்பதை தெரிவித்திருக்கிறார். 

இதனால் விற்பனையாளருக்கு ஹேமந்த் மீது மேலும் சந்தேகம் வலுத்தது. இந்நிலையில் காவல்துறையினருக்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த தகவல் தெரிந்த போலீசார் ஹேமந்தை வளைத்துப் பிடித்து கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.