குஜராத் மாநிலத்தில் திருநங்கைகள் கொடுத்த அதிக தொல்லை காரணமாக இனிமேல் அவர்கள் பிச்சை எடுக்க கடைகளுக்கோ வணிக நிறுவனங்களுக்கும் வரக்கூடாது என வியாபாரிகள் தடை விதித்துள்ளனர்.
இனிமேல் வேண்டாம்! வியாபாரிகள் எடுத்த முடிவு! தவிக்கும் திருநங்கைகள்!

கடந்த வாரம் வணிக வளாகம் ஒன்றில் என்ற திருநங்கை ஒருவர் அங்கு பணம் கேட்டு பிச்சை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பணம் தரமுடியாது என அந்த கடையின் உரிமையாளர் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த சில திருநங்கைகள் அவரை மானபங்கப் படுத்தியும் இடத்தையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.
இதனால் நிலைகுலைந்த அந்த கடை இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொதித்தெழுந்த குஜராத் மாநிலம் சூரத் நகர் வியாபாரிகள் இனிமேல் பிச்சை எடுக்கும் என்ற நோக்கத்தில் யாரும் பணம் கேட்டு வரக்கூடாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றினர்.
இனிமேல் சூரத் நகரில் திருநங்கைகள் வணிக வளாகத்திற்குள் கடைக்குள் நுழையவும் பணம் கேட்டு பிச்சை எடுக்கவோ கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நாள்தோறும் திருநங்கைகளால் ஏற்படும் தொல்லைகளை ஏராளமான வணிக நிறுவனங்களும் வியாபாரிகளும் அனுபவித்து வருகின்றனர். ஒன்று பணம் கொடு அல்லது இந்த இடத்தை விட்டு செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்கும் திருநங்கைகளுக்கு வேறுவழியின்றி ஐந்தோ பத்தோ கொடுத்துவிட்டு தான் வியாபாரிகள் தங்கள் பிரச்சனையை சுமுகமாக முடிக்கின்றனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றாலும் வேலைகளுக்கு நடுவில் எங்கே அங்கு சென்று அடைவது என்ற காரணத்தினாலேயே வருமானம் வருகிறதோ இல்லையோ என கவலைப்படாமல் இருக்கிற காசை கொடுத்து விட்டு அன்றைய பிரச்சனையில் சமாளித்து வருகின்றனர்.
ஆனால் சில திருநங்கைகள் இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பணம் கொடுக்காத வியாபாரிகளிடம் ஆபாசமாக நடந்து கொள்வதும் தங்கள் ஆடைகளை கிழித்து எறிந்து சில பிரச்சினைகள் உண்டு பண்ணுவதும் நாள் தோறும் நடந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.