117 வயது..! கின்னஸ் சாதனை..! குறைப் பிரசவத்தில் பிறந்து தற்போது உலகின் மூத்த பெண்மணி ஆனார்!

டோக்கியோ: உலகில் வசிக்கும் மனிதர்களிலேயே மிகவும் வயதானவர் என்ற சாதனையை ஜப்பானை சேர்ந்த ஒரு மூதாட்டி நிகழ்த்தியுள்ளார்.


தெற்கு ஜப்பானில் உள்ள ஃபுகோவ்கா பகுதியை சேர்ந்தவர் கேன் தனாகா. 117 வயதான இவர், ஜனவரி 2ம்தேதி தனது 117வது பிறந்த நாளை நண்பர்கள், உறவினர்கள் சூழ கேக் வெட்டி கொண்டாடினார். இந்நிலையில், அவருக்கு, உலகில் வசிக்கும் மனிதர்களில் மிக வயதானவர் என்ற  அங்கீகாரத்தை வழங்கி, உரிய சான்றிதழை, கின்னஸ் அமைப்பு வழங்கியுள்ளது.

இதன்படி, கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும்  அவரது பெயர் இடம்பிடித்துள்ளது. கடந்த 1903ம் ஆண்டு குறை பிரசவத்தில் பிறந்த தனாகா, விரைவிலேயே இறந்துவிடுவார் என்று அவரது குடும்பத்தினரால் கருதப்பட்டதாம். ஆனால், அவர் அதையும் தாண்டி நீண்ட நாளாக, அவர் ஆரோக்கியத்துடன், தனது 5 குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக, கின்னஸ் உலக சாதனை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானில் முதியவர்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். ஆனால், இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.