கைக்குழந்தையுடன் காவல் நிலையம் வந்த பெண்! பலவந்தப்படுத்திய இன்ஸ்பெக்டர்! வைரல் புகைப்படம்!

கைக்குழந்தையுடன் உள்ள பெண்ணை, போலீஸ் ஒருவர் தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் ரயில்வே போலீஸ் நிலையத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதில், அடையாளம் தெரியாத போலீஸ் ஒருவர்,  கைக்குழந்தையுடன் உள்ள 3 பெண்களை தரையில் அமர வைத்து விசாரணை நடத்துகிறார். அப்போது, அவர்கள் 3 பேரும் தரையில் விழுந்து, அழுதபடி, தங்களை விடுதலை செய்யும்படி கோருகிறார்கள்.

ஆனால், அதனை புறக்கணித்துவிட்டு, அதில் ஒரு பெண்ணை குறிவைத்து, அந்த போலீஸ் நபர் தலைமுடியை பிடித்து இழுத்து, லத்தியால் கடுமையாக அடிக்கிறார். இதனை சக போலீசார் 3 பேர் சிரித்தபடி வேடிக்கை பார்க்கின்றனர்.

இச்சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதேசமயம், குறிப்பிட்ட போலீஸ் நபர், தேர்தல் பணிக்காகச் சென்றுள்ளதால், அவரை விசாரிக்க முடியவில்லை என, மத்தியப் பிரதேச போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.