சடலத்தை எடுத்துட்டு போக யாரும் இல்ல..! 15 மணி நேரமாக கணவன் உடலுடன் கதறிய ஜெயா பாட்டி! மயிலாப்பூர் பரிதாபம்!

மயிலாப்பூரில் சாந்தோம் சர்ச் அருகில் வயது முதிர்ந்த கணவன் - மனைவி நீண்ட காலமாக சாலையில் வசித்து வந்தனர்.


தற்போது உள்ள சூழலில் அக்கம்பக்கத்தில் உள்ள இளைஞர்கள், தன்னார்வலர்கள் அவர்கள் இருவருக்கும் உணவு கொடுத்து காப்பாற்றி வந்தனர்.

இந்த நிலையில் அந்த முதியவர் இன்று காலை மரணமடைந்தார். இதைக் கண்டு வேதனையடைந்த பொதுமக்கள் அவர் உடலை துணியால் மூடி மாலை அணிவித்து, தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த பாட்டிக்கு ஆறுதல் கூறினர்.

சென்னை மாநகராட்சிக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்தனர். சாதாரண காலமாக இருந்தால் பொதுமக்களே நல்லடக்கம் செய்திருப்பர்.

இன்று மாலை 3 மணி வரை மாநகராட்சி ஊழியர்கள் வரவில்லை. உடல் அருகே வயது முதிர்ந்த பாட்டி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தது வேதனையாக இருந்தது.