சிம்மாசனம் போன்ற பனிப்பாறை! புகைப்படம் எடுக்க சிரித்த முகத்துடன் அமர்ந்த பாட்டி! பிறகு நேர்ந்த விபரீதம்!

ஐஸ்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட 77 வயது டெக்சாஸ் மூதாட்டி பனிப்பாறையில் அமர்ந்து போட்டோ எடுத்த போது கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.


ஐஸ்லாந்து நாட்டுக்கு தனது மகன் உள்ளிட்டோருடன் சுற்றுப் பயணம் வந்த்ஹ 77 வயது ஜுடித் ஸ்டிரெங் கடற்கரைக்குச் சென்ற போது கடலுக்குள் இருந்து அடித்து வரப்பட்ட ராஜ சிம்மாசனம் போன்ற பனிப்பாறையின் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டார். 

அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது மகன் ஜுடித் ஸ்டிரெங்கை அந்தப் பனிப்பாறையில் அமரவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்தப் பனிப்பாறை அலையில் அடித்துச் செல்லப்படும்  என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

பனிப்பாறை நிலைதடுமாறி நகர்ந்ததால் மூதாட்டியும் அவரது மகனும் அதிர்ச்சியடைந்தனர்.  தாயைக் காப்பாற்ற அவர் ஓடிய நிலையில் அதற்குள் காலம் கடந்திருந்தது அதிவேகமாக வந்த அலை ஒன்று பனிப்பாறையோடு சேர்த்து மூதாட்டி ஜுடித் ஸ்டிரெங்கையும் கடலுக்குள் இழுத்துச்  சென்றது. 

இந்நிலையில் ஜுடித்தின் மகன் தனது மகளுக்கு ஜுடித்தின் புகைப்படங்களை அனுப்பினார் அவர்  புகைப்படம் எடுக்க அலையின் வேகத்தில் விலகி விலகிச் சென்ற மூதாட்டியின் புகைப்படங்களை ஐஸ்பெர்க் குயின் என்ற தலைப்போடு அவரது பேத்தி கிறிஸ்டியன் இணையதளத்தில் வெளியிட்டார். அடுத்ததாக ஒரு மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா, ஒரு கடலோரப் காவல் படை வீரர் மூதாட்டி ஜுடித் ஸ்டிரெங்கை மீட்டுக் காப்பாற்றியதுதான்.