கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை என்றும் கொரோனா உயிரிழப்பு விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை; மறைக்கவும் முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திடீரென ஆவேசம் ஆகியிருக்கிறார்.


தமிழகத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஆதாரபூர்வமாக செய்தி வெளியானது. இந்த செய்தி வெளியான பிறகும் அரசு தரப்பில் இருந்து யாரும், எதையும் உறுதி செய்யவில்லை. 

ஒருசில மரணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதன்பின்னரே கொரோனா மரணமாக எழுதப்படும் என்பதால், காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று சமாளிக்கிறார்கள். இந்த நிலையில், புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே கொரோனா உயிரிழப்புகள் வெளிப்படையாக அறிவிக்கப்படுகின்றன- என்று கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, உயிரிழப்புகளை மறைப்பதால் அரசுக்கு என்ன பயன் என்று அரிய கேள்வி ஒன்றும் எழுப்பியிருக்கிறார்.

கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. 

பல்வேறு நோய் உள்ளவர்களால் தான் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது- முதல்வர் பழனிசாமி. அதுசரி, மூன்றே நாட்களில் கொரோனா காணாமல் போய்விடும் என்று சொன்னவர்தானே நம்ம எடப்பாடியார்...?