6 வயது சிறுவன் எலும்புகளை துண்டு துண்டாக வெட்டி நிமிர்த்திய அரசு டாக்டர்கள்! மருத்துவ உலகில் புதிய சாதனை!

எலும்பு அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவமனை சாதனை.


தமிழகத்தில் முதல் முறையாக கால் வலும்பு வளைந்து அவதிப்பட்டு வந்த மகன், தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

கொளத்தூரை சேர்ந்த ரவீந்திரன் கால் எலும்பு வளைந்து நடக்க முடியாமல் சிறு வயதில் இருந்தே அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு ரவீந்திரனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சரவணன் என பெயரிடப்பட்ட அந்த குழந்தைக்கு கால் எலும்புகள் வளைந்துள்ளதை 6வது மாதத்தில் கண்டுபிடித்தார் ரவீந்திரன். 

பின்னர் அவரது குழந்தைக்கு 6வது மாதத்தில் இருந்து சுமார் 6 ஆண்டுகள் வரை மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் மரபணு குறைபாடு ஏற்பட்டதால் தந்தையைப் போலவே மகனுக்கும் கால் எலும்பு வளைந்துள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் இந்த பாதிப்பு சராசரியாக 10 ஆயிரம் பேரில் 1 அல்லது 2 குழந்தைகளுக்கு பெற்றோர்களிடம் இருந்து வரக்கூடிய பிரிடில் போஃன் நோய் (Brittle bone disease) என தெரிவித்தனர். இந்த பாதிப்பால் குழந்தைகளின் எலும்பு வளையும் அல்லது எளிதில் உடையக்கூடிய தன்மையுடன் இருக்கும் என்றும் இதனால் நடப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிறக்கும் போதே கால் எலும்பு வளைந்து நடக்க இயலாமல் சிரமப்பட்ட 6 வயது சிறுவன் மற்றும் தந்தை ரவிந்திரனுக்கு அரியவகை சிகிச்சை மூலம் இயல்பாக நடக்க வைத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

எலும்புகளை வெட்டி எடுத்து மீண்டும் இணைக்கும் அறுவை சிகிச்சை தமிழகத்தில் முதல் முறையாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது என்பது நமக்கு கூடுதல் பெருமை.

இந்த சாதனையை முடநீக்கியல் துறையின் நிபுணர்கள், மருத்துவர் பசுபதி மற்றும் அவரது குழுவினரால் சாத்தியமாகி உள்ளது. தற்போது சரவணன் யார் உதவியும் இன்றி நடக்க பழகி உள்ளான்.

2013 ஆம் ஆண்டில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கிய சிகிச்சை 6 மாத குழந்தையில் இருந்து 5 வயது வரை சரவணனுக்கு பாமிட்ரேட் என்னும் மருந்து கொடுக்கப்பட்டு எலும்பு வலுவாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. வளைந்த கால் எலும்புகளை வெட்டி டெலிஸ்கோபிக் ராடு வைத்து அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

அதேபோல சரவணனின் தந்தை ரவீந்திரனுக்கும் ஒரு காலில் ஏற்பட்டுள்ள எலும்பு வளைவு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. பொதுவாக இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ஆகும் செலவு சுமார் 10 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.