டாஸ்மாக்கில் இனி எப்போதும் ஜில் ஜில் பீர்! குடிமகன்களின் ஏக்கம் தீர்கிறது!

டாஸ்மாக் கடைகளுக்கு புதிய குளிர்சாதன பெட்டிகளை வினியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது.


வெயில் காலம் என்றாலே பொதுமக்கள் தேடிச் செல்வது பழச்சாறுகளை கடைகளைத்தான். ஆனால் குடிமகன்கள் தேடிச் செல்வது டாஸ்மாக் கடைகளை. காரணம் கூலிங் பீர் ஒன்று வாங்கி குளுகுளுவென குடித்தால் தான் சுட்டெரிக்கும் சூரியனுக்கும் சவால் விட முடியும் என்பது அவர்களது எண்ணம்.

ஆனால் தற்போதெல்லாம் டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் கிடைப்பதென்பது மிகவும் சவாலான விஷயம். அதற்கு நிறைய காரணங்கள் உண்டு. அவற்றுள் முக்கியமானது டாஸ்மாக் கடைகளில் இருக்கும் பெரும்பாலான குளிர்சாதனப் பெட்டிகள் பழையவை மற்றும் பழுதானவை என்பதே ஆகும். குடிமகன்கள் கொடுக்கும் தொந்தரவை தாங்க முடியாத டாஸ்மாக் ஊழியர்கள் இந்தப் பிரச்சனையை நிர்வாகத்துக்கு எடுத்துரைத்தனர்.

இதைப் புரிந்து கொண்ட டாஸ்மாக் நிர்வாகம், பழைய மற்றும் பழுதான குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கும் டாஸ்மாக் கடைகளை கணக்கெடுத்தது. அதன் அடிப்படையில் தற்போது பீர் பாட்டில்களை அடுக்கி வைப்பதற்காக 2000 புதிய குளிர்சாதன பெட்டிகளை அரசு கொள்முதல் செய்துள்ளது.

இந்தக் குளிர்சாதன பெட்டிகளை வினியோகிக்கும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. எனவே இனி கூலிங் பீர் கிடைக்காதோ என்ற கவலை குடிமக்களுக்கு தேவையில்லை.