அடிக்குது காத்து; பறக்குது அரசுப் பேருந்து டாப்பு: பயணிகள் மரண பீதி!

கிருஷ்ணகிரி: காற்று அடித்த காரணத்தால், ஓடும் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஓசூரில் இருந்து கெலமங்கலம் வழியாக, அஞ்செட்டி துர்க்கம் செல்லும் 12ம் எண் அரசுப் பேருந்தில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாள்தோறும் சுமார் 20 முறை அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் இப்பேருந்தின் மேற்கூரை அடிக்கும் காற்றில், அப்படியே மேலே பெயர்ந்து, கீழே விழுவது போல பறக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பேருந்தின் பின்னால் சென்ற ஒரு நபர், இதனை படம்பிடித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். எந்த நேரத்திலும் கீழே விழும் ஆபத்துடன், மேற்கூரை பறந்த நிலையில், ஒரு அரசுப் பேருந்து செல்வது அதிர்ச்சி அளிப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்

. இதைப் பார்த்த பலரும், பேருந்தின் உள்ளே உள்ள பயணிகள் மற்றும் சாலையில் நடமாடும் பொதுமக்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என சொல்ல முடியவில்லை. உடனடியாக, போக்குவரத்துக் கழகம் இந்த பிரச்னையை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.