சென்னை: பொதுமக்கள் தூர்வாரி சரிசெய்துவிட்ட சிட்லப்பாக்கம் ஏரியை ரூ.25 கோடிக்கு மீண்டும் தூர்வார உள்ளதாக, தமிழக அரசு கூறியுள்ளதாக, சமூக ஊடகங்களில் புகார் எழுந்துள்ளது.
பொதுமக்களே தூர்வாரிய ஏரியை மீண்டும் தூர்வார ரூ.25 கோடி ஒதுக்கிய எடப்பாடி! இப்படியுமா ஊழல்?

சென்னையில் உள்ள ஏரிகளில் சிட்லப்பாக்கம் ஏரி முக்கியமானதாகும். குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள இந்த ஏரி, சுற்றுப்புற மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், இந்த ஏரியை சமீபத்தில், பொதுமக்களும், தன்னார்வ தொண்டர்களும் இணைந்து, தூர்வாரினர். இதுபற்றி பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியானது.
அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தாங்களே இந்த பணியை மேற்கொண்டதாக பொதுமக்கள் குறிப்பிட்டனர்.
நிலைமை இப்படியிருக்க, தற்போது சட்டமன்ற கூட்டத்தொடரில், விதி எண் 110ன் கீழ், சிட்லப்பாக்கம் ஏரியை ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூர்வார உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதனை கடுமையாக சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி தமிழகத்தில்தான் உள்ளாரா, அல்லது அதிகாரிகள் யாரும் அவருக்கு இதுபற்றிய தகவலை தெரிவிக்கவில்லையா, ஏற்கனவே தூர்வாரிய ஏரிக்கு மீண்டும் தூர்வார நிதி தருவது நியாயமான செயல்தானா எனவும் நெட்டிசன்கள் சராமரியாக கேள்வி எழுப்புகின்றனர்.