இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான விப்ரோ. தனியார் வங்கியில் முண்ணனியாக திகழும், ஐசிஐசிஐ வங்கியிடமிருந்து 2200 கோடி மதிப்புள்ள தகவல் தொழில்நுட்ப சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
விப்ரோவுக்கு நல்ல யோகமடா! ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியுடன் பலே ஒப்பந்தம்!

7 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அறிவித்துள்ள விப்ரோ. மும்பையைச் சேர்ந்த வரா இன்ஃபோடெக் Vara Infotech நிறுவனத்துடன் வணிக பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வரா இன்ஃபோடெக் நிறுவனம் தற்போது ஐசிஐசிஐ வங்கிக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்குகிறது, இந்த மென்பொருள் வணிகத்தை விப்ரோ கையகப்படுத்திய பின், செப்டம்பர் முதல் விப்ரோ மென்பொருள் நிறுவனம், ஐசிஐசிஐ வங்கிக்கு புதிய சேவை வழங்கும் நிறுவனமாக மாற உள்ளது.
வரா இன்ஃபோடெக் (vara infotech) நிறுவனம் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாகும், இந்த நிறுவனம் வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு (BFSI) பிரிவுகளுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில். BFSI எனப்படும் வங்கி.நிதி மற்றும் காப்பீடு சார்ந்த தொழில்நுட்ப துறையில் மட்டுமே சுமார் 32 சதவீத வருவாயைப் பெற்றதாக விப்ரோ மென்பொருள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று இந்தியா உலகின் மிகச் சிறந்த மென்பொருள் நிறுவனங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் திறமையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக தொடர்பான சேவைகளுக்கு உலகம் முழுவதும் புகழ்பெற்றவை என்பது உலகறிந்த விஷயம்.
உள்கட்டமைப்பு மென்பொருள். எண்டர்பிரைஸ் சாப்ட்வேர் எனப்படும் நிறுவன மென்பொருள்.பாதுகாப்பு மென்பொருள் என பல்வேறு வகையான மென்பொருள் நிறுவனங்கள் இந்தியாவின் பெரு நகரங்களில் புற்றீசல் போல வளர்ந்துள்ளன.
அதில் குறிப்பாக சில நிறுவனங்கள் மட்டுமே சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்கிறன. மேலும் இந்திய மென்பொருள் துறையை கணக்கிட்டால் கீழ்க்கண்ட 10 நிறுவனங்கள் மட்டுமே 90 சதவிகித மார்கெட் பங்குகளை ஆக்கிரமித்திருக்கின்றன என்றால் ஆச்சரியம் தான்.
டாடா கன்சல்டன்சி சர்வீஸ்.விப்ரோ லிமிடெட். இன்போசிஸ் லிமிடெட். எச்.சி.எல் டெக்னாலஜிஸ் லிமிடெட. சத்யம் கம்ப்யூட்டர்ஸ் சர்வீசஸ் லிமிடெட். டெக் மஹிந்திரா லிமிடெட். எம்ஃபாஸிஸ் லிமிடெட். பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்.
ஆரக்கிள் ஃபைனான்ஸியல் சர்வீசஸ் சாப்ட்வேர் லிமிடெட் மற்றும் 3i இன்ஃபோடெக் லிமிடெட் போன்ற வளர்ந்த நிறுவனங்கள் மட்டுமே தற்போதைய பொருளாதார மந்தநிலையிலும் கூட நிலையாக வணிகம் செய்து வருகின்றனர். குறிப்பாக கடந்த நிதியாண்டில் மட்டும் 180 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மொத்த வருமானத்தை எட்டியுள்ளது இந்திய மென்பொருள் துறை.
மணியன் கலியமூர்த்தி