கொரோனாவிலிருந்து எஸ்கேப்...! முதியவர்களுக்கு நல்ல ஆலோசனைகள்..

முதியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவோம் – கொரோனா தாக்காமல் காப்போம்.


60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எல்லா வித நோய்களும் எளிதில் வந்துவிடுகிறது, இதற்குக் காரணம், வைட்டமின் குறை, நீர் சத்து குறைபாடு, சரிவிகித உணவு இல்லாமை. முறையான சத்தான உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளும் போது, உடல்நலத்தை பாதுகாக்க முடியும், நோய் கிருமிகள் தாக்காது, வேறு உடல் உபாதைகள் வராமலும் தடுக்கமுடியும்.

சத்தான உணவு முறைப்பழக்கத்தை வயதானவர்களுக்கு ஏற்படுத்துதல் என்பது சொல்வதைக் காட்டிலும் நடைமுறைப் படுத்துவது கடினம். பசியின்மை, நீண்ட தூரம் சென்று பொருள்களை வாங்க முடியாமை, அளவு குறைவாக சமைத்தல் போன்ற காரணங்களால் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள முடிவதில்லை.

புளூ, கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கான வைரஸ்களும் எளிதில் வயதானவர்களையே அதிகம் தாக்குகிறது. இதிலிருந்து வயதானவர்களை காத்துக்கொள்ள என்னென்ன உணவுப் பொருள்களை சாப்பிடலாம்?

· சப்ஜா விதைகள் இரத்தத்தில் சர்க்கரையைக் குறைக்கும், ஓட்ஸ் எடுத்துக் கொள்ளும் போது டாப்பிங்காக சேர்த்துக் கொள்ளலாம்.

· ரெட் செர்ரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட் உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி போன்றவற்றை குறைக்கும் தன்மையுடையது.

· முதியவர்களுக்கு ஏற்படும் அல்சீமர் என்னும் மறதி நோயை தடுக்க, ஒமேகா-3 ஆசிட் நிறைந்த சால்மன் மீன்களை எடுத்துக் கொள்ளலாம். இவை மறதிக்கு காரணமான பீட்டா-அமைலாய்டு புரொட்டீன் அளவைக் குறைக்கும்.

· வயதானவர்களுக்கு கண்பார்வை குறைவு மற்றும் கேட்டராக்ட் வருவதைத் தடுக்க, பாதாம் பருப்பினை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

· தினமும் கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

· கொழுப்பில்லாத பாலில் கால்சியம் சத்து அதிகம். இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்பை வலிமைப்படுத்தி ஆரோக்கியமாக வத்துக் கொள்ள முடியும்

· இதயத்தைப் பாதுகாக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் நார்சத்து நிறைந்த முழுதானியங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

SARS வைரஸ் தாக்கத்தின் போது, பாதிக்கப்பட்டவர்களில் 50% பேர் 50 வயதிற்க்கு மேற்பட்டவர்கள். சைனாவில் கொரோனா தாக்கப்பட்ட முதல் 425 பேர்களின் வயது விகிதாச்சாரம் 75. முதியவர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க, உடல்நலனைப் பாதுகாக்க, சத்தான ஆரோக்கியமான உணவினை கிடைக்கச் செய்ய வேண்டும்.

 -ராமலெட்சுமி