பீர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி. சாம்பார் பொடி கேள்விப்பட்டிருப்பீங்க, இப்போ வந்தாச்சு பீர் பொடி!

பீர் வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போவது மிகப்பெரும் அவஸ்தை. ஏனென்றால் பெரிய பாட்டிலாக இருக்கும், மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைத்து எடுத்துச்செல்ல முடியாது. ஒளித்து வைக்கவும் முடியாது.


இத்தனை பெரிய பிரச்னை குடிமகனுக்கு இருப்பதை அறிந்து கிங்பிஷர் நிறுவனம் இப்போது புதிதாக பாக்கெட் பீர் அறிமுகம் செய்திருக்கிறது. ஆம், ஒரு பாக்கெட் பீர் பொடி போதும், வீட்டில் ஒரு பாட்டில் பீர் செய்துவிடலாம்.

அதிகம் எதுவும் செய்யவேண்டியதில்லை. ஜில் தண்ணீர் ஒரு லிட்டர் எடுத்துக்கொண்டால் போதும், அதற்குள் இந்த பீர் பொடியைப் போட்டு கலக்கோ கலக்கு என்று கலக்கினால் போதும், இதோ பீர் ரெடி.

வீட்டில் இந்த பாக்கெட் இருந்தால் போதும், நைட் கடையை மூடிவிட்டார்களே என்று அச்சப்பட வேண்டாம். தண்ணீர் பாட்டிலில் கலந்து ஜாலியாகக் குடிக்கலாம். இன்னும் என்னவெல்லாம் பாக்கெட்ல வரப்போகுதோ..?