ஊக்க மருந்து! கோமதி மாரிமுத்துவுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை! ஒட்டு மொத்த தமிழகமும் அதிர்ச்சி!

தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்திய புகாரில் கோமதி மாரிமுத்து தடகளப்போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்று 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர் கோமதி மாரிமுத்து. 2.70 நிமிடங்களில் 800 மீட்டர் தொலைவை ஓடி புதிய சாதனையும் படைத்தார் கோமதி மாரிமுத்து. இதனை தொடர்ந்து அவருக்கு தமிழகத்தில் பரிசுகளும், பாராட்டுகளும் குவிந்தன.

தமிழகம் திரும்பிய அவரை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாடினர். இந்த நிலையில் போட்டிக்கு பிந்தையை ஊக்க மருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி அடைந்துள்ளா. அவரது சிறுநீர் மாதியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்தது சோதனையில் உறுதியாகியுள்ளது. 

இதனால் கோமதி மாரிமுத்து தடகளப்போட்டிகளில் பங்கேற்க இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது 2ம் கட்ட ஊக்க மருந்து சோதனை விரைவில் நடைபெற உள்ளது. அதிலும் கோமதி மாரிமுத்து தோல்வி அடையும் பட்சத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் தடகளப்போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.