கருப்புச் சந்தையில் விற்கப்படும் கடவுள்! அத்திவரரை பார்க்க ரூபாய் 5 லட்சமா?

அத்திவரதர் இன்னும் 72 மணி நேரம்தான் வெளியே இருப்பார் என்பதால் அவரைப் பார்க்க எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.


இதை பயன்படுத்திக் கொண்டு கோடிகளில் கொள்ளையடிக்கப் படுவதாக கோவிலில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன.கலக்ட்டர் பொது வெளியில் காவலரிடம் எகிறிவிட்டு மன்னிப்பு கேட்டதோடு வருவாய்துறையும் ,காவல் துறையும் இந்த காசு ரேஸில் இருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார்களாம்.அடுத்த போட்டி அறநிலையத்துறை ஊழியர்களுக்கும்,கோவில் பூசாரிகளுக்கும் இடையே உச்சத்துக்குப் போய் இருக்கிறது.

இந்துசமய அ.நி.துறை ஊழியர்களும் ஆயிரக்கணக்கில் காசு பார்த்துவிட்டு வி.ஐ.பி, வி.வி.ஐ.பி பாஸ்கொடுத்து அனுப்பினாலும் அவர்களுக்கெல்லாம் ஜரகண்டி , ஜரகண்டி என்று நொடி நேர தரிசனம்தான்.ஆனால் , கோவில் பூசார்கள் காட்டில் கரன்சிமழை கொட்டுகிறதாம். எப்படித்தெரியுமா. அத்திவரதரை சந்திக்க ஆன்லைன் புக்கிங்கை அரசு ஏற்படுத்தி இருக்கிறது.

அங்கேதான் பூசாரிகளின் புத்தம் புதிய ஐடியா வேலை செய்கிறது.அந்த டிக்கெட்டுகளை பூசாரிகளே வெவ்வேறு பெயர்களில் வாங்கி விடுகிறார்கள். அந்த டிக்கெட்டுகள் கறுப்புச் சந்தை விலை 25 ஆயிரத்தில் துவங்குகிறது. அதுவும் அத்திவரதரின் முன்னாள் அமர்ந்து தரிக்க நிமிடத்துக்கு இவ்வளவு என்று கட்டணம் எகிறுகிறதாம். ஐம்பதாயிரம் முதல் 5 லட்சம் வரை வசூலிக்கிறார்களாம்.

சமீபத்தில் விஜயகாந்த் தன் குடும்பத்துடம் வந்து தன்மகன் சண்முக பாண்டியனின் புதுப் படத்தின் பூஜையையே அத்திவரதர் முன்னால் நடத்தி முடித்தார் அல்லவா அதற்கு வசூலிக்கப் பட்ட கட்டணம் பிரேமலதாவையே பிரமிக்க வைத்து விட்டதாம்.ஆனால்,இனி வரப்போகும் அடுத்த 72 மணிநேர வசூல் வரலாறு காணாதா வசூலாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.அனேகமாக நிமிட கணக்குப் போய் விநாடிக் கணக்கில் வசூல் நடக்கும் என்கிறார்கள்.

அதுவும்,ஆகஸ்ட் 17ம் தேதி பொதுமக்களை அனுமதிக்காமல் சிறப்பு பூஜைகள் செய்து அத்தி வரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கப் போகும் வைபவத்தைக் காண மிகச்சிலரை அனுமதித்து கோடிகள் வசூலிக்கத் திட்டம் இருக்கிறதாம்.அநேகமாக அத்தி வரதர் உள்ளே போன பிறகு வெடித்துக் கிளம்பும் ஊழல் புகார்களில் பலபேர் உள்ளே போவார்கள் என்று தெரிகிறது.