கொரானாவில் இருந்து தப்பிக்க..! பெண்களின் உள்ளாடையை மாஸ்க்காக பயன்படுத்தும் விநோதம்!

கொரோனாவின் கோரத் தாண்டவம் ஒரு புறம் இருக்க, முகமூடி தட்டுப்பாடு என்பது ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது.


இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் ஜப்பானை சேர்ந்த ஒரு பெண் தனது உள்ளாடையை முகமூடி அணிந்து இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இதற்கு பல பதிவுகளும் பதிவிட்டு வரப்படுகின்றன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் , பாதுகாப்பிற்கு முக்கியத்துவமாக இருக்கும் முகமூடிகளின் பற்றாக்குறை மிகப் பெரும் அளவில் அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக ஜப்பான் மாடல் ஒரு யோசனை செய்து உள்ளார் . அது என்னவென்றால் ஒரு பெண்ணின் உள்ளாடையை முகமூடியாக பயன்படுத்தலாம் என்பதுதான் அது.இந்த யோசனையை சொல்வது மட்டுமல்லாமல் அதை எப்படி தயாரிப்பது என்பதையும் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் பாதிப்பால் உலகம் முழுவதும் முகமூடி தட்டுப்பாடு உள்ளன. குறிப்பாக அமெரிக்காவிலும் இது போன்ற தட்டுப்பாடு காரணமாக சில தினங்களுக்கு வெளியான வீடியோக்களில் இரண்டு பெண்கள் சூப்பர் மார்க்கெட்டில் கழிவறை பேப்பருக்கு அடித்துக் கொண்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஜப்பான் பெண் ஒருவர் இப்படி ஒரு வீடியோவை பகிர்ந்த்து. வைரலாகி வருகிறது. மேலும், சிலர் நகைச்சுவையாக பதிவுயிட்டு வருகின்றனர்.