துப்பாக்கிச் சூடு! மண்டைக்குள் பாய்ந்த குண்டுடன் 7 கிலோ மீட்டர் ஓடிய சிங்கப் பெண்மணி! அதிர்ச்சி சம்பவம்! பதற வைக்கும் காரணம்!

குடும்ப தகராறு காரணமாக தலையில் குண்டு அடி பட்ட பெண் மணி ஒருவர் அதனோடே சுமார் 7 கி மீ வரை சென்று மருத்துவ மனையில் சேர்ந்துள்ளார்.


பஞ்சாப் மாநிலத்தின் சொத்து பிரச்சனை காரணமாக சொந்த சகோதரரே துப்பாக்கியால் தாக்கியதில் சகோதரி மற்றும் அம்மா காயமடைந்த சோகம் நிகழ்ந்து உள்ளது. சும்தி கவுர் எனும் 42 வயதே ஆன பெண் மணிக்கு அவரது தகப்பனார் இறந்த போது சுமார் 16 ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார்.

அந்த நிலத்தை அபகரிக்க திட்ட மிட்ட சுமித் கவுரின் சகோதரர் மற்றும் அவரது மகனும் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வாக்கு வாதம் முற்றிய நிலையில் சுமித் கவுர் மற்றும் அவரது தாய் என்று கூட பாராமல் துப்பாக்கியால் சரமாறியாக தாக்கியுள்ளனர்.

இதனால் அவரது முகம் மற்றும் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவரே சுமார் 7 கி மீட்டர் வரை தொலைவில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று அனுமதித்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சுமித் கவுர் காவல் துறையில் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது சகோதரர் மற்றும் அவரது மகன் உட்பட கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்