ஏற்காடு கூட்டிட்டு போனான்..! இப்ப வீட்டை பூட்டிட்டு போய்ட்டான்..! நடுத்தெருவில் காதலி! தப்பி ஓடிய காதலன்!

சேலம் - கொண்டலாம்பட்டி அடுத்த எஸ் .நாட்டமங்கலத்தில் காதலித்துவிட்டு கைவிட்டவனை சேர்த்து வைக்கக்கோரி பாதிக்கப்பட்ட பட்டதாரி பெண் காதலன் வீட்டின் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.


சேலம் மாவட்டம் கொண்டாலம் பட்டி அரகே உள்ளது எஸ்.நாட்டமங்கலம் என்ற கிராமம். இங்கு வசித்து வரும் பி.ஏ. படித்துள்ள கவுசல்யா என்ற பெண் அதே பகுதியை சேர்ந்த தறி தொழில் செய்து வரும் பூபதி என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக காதலித்ததோடு மட்டுமல்லாமல் நெருங்கியும் பழகி வந்த பூபதி தனக்கான தேவை முடிந்தவுடன் கவுசல்யாவை கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னை காதலுனுடன் சேர்த்து வைக்குமாறு கொண்டாலம்பட்டி காவல் நிலையத்தில் முறையிட்ட கவுசல்யாவின் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

மேலும் இந்த விஷயம் அறிந்த கவுசல்யாவை வீட்டை விட்டு பெற்றோர் விரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கவுசல்யா இன்று காலை காதலன் பூபதி வீட்டிற்கு செல்ல அங்கு அவரது வீடு பூட்டு போட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஒருவேளை தன்னை ஏமாற்றிவிட்டு காதலன் ஊரை விட்டு சென்றுவிட்டார் என கருதிய கவுசல்யா அவரது வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தன்னை காதலித்து நெருங்கி பழகிய பூபதி திருமணம் செய்ய மறுத்து மட்டும் அல்லாமல் பெற்றோரும் ஏற்க மறுத்த நிலையில் நடுத் தெருவில் போராட்டக் கண்ணீர் மல்க போராட்டம் செய்து வருகிறார் கவுசல்யா. எப்படியாவது காதலனை கண்டுபிடித்து தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் என கூறியுள்ளார்

இதை அறிந்து வந்த நண்பர்கள் உறவினர்கள் என பலர் அறிவுரை கூறியதை ஏற்காமல் இன்று காலை முதல் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு சிலர் தண்ணீர் உணவு என உதவி செய்ய முன்வந்தபோதும் அதை நிராகரித்து விட்டார் கவுசல்யா.

திருமணத்திற்கு பின்னர் காதலிக்க வேண்டியதுதானே என நம்மை சுற்று உள்ள சமூகம் அறிவுரை கூறும்போது பெண்களுக்கு கசப்பாக உள்ளது. அறிவுரை கூறும்போது காதலன் கண்கண்ட தெய்வமாகவும், சமுதாயம் எதிரியாகவும் தெரிகிறது. காதலித்துவிட்டு கயவர்களால் நடுத் தெருவுக்கு வரும்போது சமுதாயம் கடவுளாக தெரிகிறது. காதலன் காலனாக தெரிகிறான்.