ஒரு கிலோ மீட்டர் உடலில் ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக ஓடிய டீன் ஏஜ் சிறுமி! நெஞ்சை உலுக்கும் காரணம்!

ஜெய்ப்பூர்: பதின் வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து நிர்வாணமாக ஓடவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா பகுதியை சேர்ந்த பதின் வயது சிறுமியை  3 பேர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஊருக்கு ஒதுக்குப் புறமான இடத்தில் வைத்து அந்த சிறுமியை, 3 பேரும் பலாத்காரம் செய்துள்ளனர்.

பிறகு, நிர்வாணப்படுத்தி, உடல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளனர். இதில் இருந்து தப்பித்த அந்த சிறுமி, ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு, ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நிர்வாணமாக உயிரை காப்பாற்றிக் கொண்டு, ஓடியுள்ளார்.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் ஒரு மார்க்கெட் கடையை கண்டுபிடித்து அங்கு உதவி கோரியுள்ளார். இதன்பிறகு, கடை உரிமையாளர் அந்த சிறுமியை காப்பாற்றி, போலீசில் ஒப்படைத்தார்.  

இதன்பேரில், சம்பந்தப்பட்ட சிறுமியை மீட்ட போலீசார் இதுபற்றி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், சிறுமியின் நண்பர்கள்தான் இத்தகைய கொடூரத்தை செய்ததாக தெரியவந்துள்ளது. அவர்களை தேடி வருவதாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.