நடு ராத்திரில எழுப்புவாங்க..! விடிய விடிய வீடியோ எடுப்பாங்க..! நித்யானந்தா சொல்றத செய்வோம்! இளம் பெண் சீடர் கூறிய பகீர் தகவல்!

ஆமதாபாத்: நன்கொடை பெற்று தரக் கூறி டார்ச்சர் செய்ததாக, நித்யானந்தா ஆசிரமம் மீது சிறுமி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தைச் சேர்ந்த நித்யானந்தா, தற்போது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க கிளைகளை நிறுவி, மிகப்பெரும் கார்ப்பரேட் ஆன்மீக சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், அவற்றையும் கடந்து, தொழில் செய்கிறார். இந்நிலையில், இவருக்குச் சொந்தமாக குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் சிறுமிகளை கடத்தி வைத்து மிரட்டுவதாக, பெங்களூருவை சேர்ந்த தனி நபர் ஒருவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற உத்தரவுப்படி, அவர்களை போலீசார் மீட்டதோடு, அங்கு பணிபுரிந்த நித்யானந்தா ஆசிரமத்தின் ஊழியர்களையும் கைது செய்தனர்.  இப்படி மீட்கப்பட்ட சிறுமிகளில், பெங்களூருவைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரும் அடக்கம். அவரது தந்தைதான் மேற்கண்ட வழக்கை தொடர்ந்தவர் ஆவார். அச்சிறுமி, நித்யானந்தா ஆசிரமத்தில் என்ன நடந்தது என்பது பற்றி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.  

அவர் கூறுகையில், ''2013ம் ஆண்டு மே மாதம் நித்யானந்தா ஆசிரமத்தில் நான் சேர்ந்தேன். ஆரம்பத்தில் நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம் ஆசிரம வாழ்வு மிகவும் மகிழ்ச்யிக இருந்தது. ஆனால், 2017ம் ஆண்டு முதலாக எங்களுக்கு பலவித டார்ச்சர் கொடுக்க தொடங்கினர். எங்களை நித்யானந்தா பேரிலும், அவரது ஆசிரமத்தின் பேரிலும் நன்கொடை பெற்று தரச் சொல்லி நிர்வாகம் தரப்பு மிரட்ட தொடங்கியது.

நன்கொடை என்றால் வெறும் சில ஆயிரம் ரூபாயில் அல்ல, லட்சக்கணக்கில் ஒவ்வொருவரும் வாங்கித் தர வேண்டும். இல்லை எனில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கித் தர வேண்டும். இதற்காக, அடிக்கடி எங்களை நள்ளிரவில் கூட உறங்கவிடாமல் அலங்காரம் செய்து, நகைகளை அணிவித்து, நித்யானந்தாவிற்காக புரோமோஷன் வீடியோவில் நடிக்கச் சொல்லி மிரட்டுவார்கள். இதைச் செய்ய மறுத்தால் எங்களின் பெற்றோரை தரக்குறைவாக திட்டுவதோடு, எங்களுக்கு உடல் ரீதியாகவும் டார்ச்சர் தருவார்கள்,'' எனக் குறிப்பிட்டுள்ளார்.