சீன நாட்டில் மின்தூக்கியின் இடைவெளிக்குள் சிக்கிக் கொண்ட குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த அதிர்ஷ்டவசமான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
திடீரென மூடிய லிப்ட் கதவு! இடையே சிக்கிக் கொண்ட குழந்தை! கதறித்துடித்த தாய்! பதைபதைக்க வைக்கும் சம்பவம்!

சீனாவின் ஹெஃபெய் மாகாணத்தில் ஒன்றரை வயது குழந்தையுடன் மின்தூக்கியில் (LiFt) சென்றுள்ளார். 10வது மாடியில் இருந்து தரைதளத்திற்கு சென்ற அவர் தரைதளம் வந்ததும் குழந்தையை வைத்திருந்த ஸ்கூட்டருடன் பின்னோக்கி இறங்கியுள்ளார். அப்போது லிஃப்டின் கதவு திடீரென மூடிக்கொண்டது. அந்த இடைவெளியில் குழந்தை சிக்கிக் கொண்டுள்ளது.
இதையடுத்து செய்வதறியாது அழத் தொடங்கினார் தாய். அவரின் கூச்சல் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் லிஃப்டின் கதவில் சிக்கிக் கொண்ட குழந்தையை போராடி பத்திரமாக மீட்டனர்.
குழந்தை லிஃப்ட்டில் மாட்டிக் கொண்டதையும், பின்னர் மீட்புக் குழுவினர் வந்து பத்திரமாக மீட்ட காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவியில் வீடியோ காட்சிகள் பதிவாகி உள்ளது. இது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக கைக்குழந்தைகளை அழைத்து செல்லும்போது 200 மடங்கு ஜாக்கிரதையாக இருந்தால் மட்டுமே நாம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதாவது நிகழ்ந்துவிட்டால் ஏதும் அறியா பிஞ்சுக் குழந்தை நம்மை விட்டு மட்டுமல்ல உலகத்தை விட்டே சென்றுவிடும்.