கெளதம் மேனனின் ஜெயலலிதா வெப் சீரிஸ் ரிலீஸ்க்கு ரெடியாம்! அ.தி.மு.க. படை என்ன செய்யப் போகுதோ..?

ஜெயலலிதா மறைந்தது முதலே அவரது கதையை படமாக்கப் போவதாக பலர் அறிவித்தனர்.பாரதிராஜா ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படம் ஆக்குவதாக அறிவித்தார்.


அது வெறும் அறிவிப்போடு நின்றுவிட்டது.மிஸ்கின் உதவியாளர் பிரியதர்ஷினி ' அயர்ன் லேடி என்கிற பெயரில் படமாக்கப் போவதாகவும் அதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யாமேனனை நடிக்க வைத்து படமாக்குவதாக அறிவித்தார்.அது ஃபஸ்ட் லுக்கோடு நின்றுவிட்டது.இயக்குநர் ஏ.எல் விஜயும் களத்தில் குதித்தார்.

தன் படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாக அறிவித்தார் . பாகுபலியின் கதாசிரியர் கே.வி விஜயேந்திர பிரசாத் கதை எழுதுவதாகவும்,கங்கனா இதற்காக பரத நாட்டியம் கற்பதாகவும்,இந்தியில் ' ஜெயா ' என்கிற பெயரிலும்,தமிழில் தலைவி என்ற டைட்டிலுடனும் படமாக்கப்படடுவதாக சொல்லப்பட்டது ஆனால் மேற்கொண்டு வேலைகள் நடக்கவில்லை.

இந்த நிலையில் இயக்குநர் கெளதம் மேனன்,ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப்சீரீஸாக எடுத்து முடித்துவிட்டாதாக செய்திகள் வருகின்றன.அதற்கு 'குயின்' என்று டைட்டில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.இதுவரை இந்த வெப் சீரீஸ் குறித்த புகைப் படங்கள் ஏதும் வெளியாகவில்லை.ரகசியமாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருப்பதாகத் தெரிகிறது.

இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்,சசிகலாவாக விஜி சந்திர சேகர் நடித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் வேடத்தில் மலையாள நடிகர் பிரிதிவி ராஜின் அண்ணன் இந்திரஜித் நடித்திருக்கிறார்.இதுவரை வில்லங்கம் ஏதுமில்லை.ஆனால் இந்த வெப் சீரிசில் தெலுங்கு நடிகர் சோபன் பாபுவின் கதாபாத்திரமும் இடம்பெற்றிருக்கிறது. அந்த வேடத்தில் தெலுங்கு நடிகர் வம்சி கிருஷ்ணா நடித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் அங்கீகரிக்கப்பட்ட சுயசரிதை என்று எதுவும் இல்லை.அவரே எழுதி குமுதத்தில் வெளிவந்த தொடர் பாதியில் நின்றுவிட்டது.அதற்குக் கூட,எம்ஜிஆர்தான் காரணம் என்று அப்போது பேசப்பட்டது.அதற்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்.அவரும் சோபன் பாபுவும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்வதாக எழுபதுகளின் இறுதியில் கிசுகிசுக்கப்பட்டது.

அதை இல்லஸ்ரேட்டட் வீக்லியில் வெளிவந்த ஒரு இண்ட்டர் வியூவில் அவர் ஒப்புக் கொண்டதாகச் சொல்லப்பட்டது.கெளதம் மேனனின் வெப் சீரிசில் ,சோபன் பாபுவின் கதாபாத்திரம் இடம் பெற்று இருப்பதால்,குயின் வெப் சீரீசில் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை விட அவரது தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் இருப்பதாகத் தெரிகிறது.இது வெளியாகும் போது அதிமுக தொண்டர்களை ஆத்திரமூட்டக்கூடும் என்று தெரிகிறது.