பெண் மீது டார்ச் லைட் அடித்து அங்கங்களை ரசித்த இளைஞன்! தட்டிக்கேட்ட கணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் புழுக்கம் காரணமாக தனது வீட்டின் வெளியே படுத்துறங்கிய மனைவி மீது அந்த வழியே சென்ற இளைஞர்கள் சிலர் டார்ச் லைட் அடித்து பார்த்ததை தட்டிக் கேட்ட கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கன்னியாகுமரி அருகே மேலமணக்குடி கடற்கரை கிராமம் லூர்து நகரை சேர்ந்தவர் வின்சென்ட் வயது 34. இவர் அந்த பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவம் நடந்த அன்று புழுக்கம் காரணமாக  இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த போது அப்போது அந்த வழியே சாலையில் சென்ற கீழமணக்குடி பகுதியை சேர்ந்த கிதியோன் என்பவர் டார்ச் லைட் அடித்தபடி வின்சென்ட் வீடு இருக்கும் வீதி வழியே சென்று உள்ளார்.

இரவு நேரம் என்பதால் அதிக வெளிச்சம் இல்லாத காரணத்தினால் சாலையில் படுத்துறங்கிய வின்சென்ட் மனைவி மீது டார்ச் லைட்டை அடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வின்சென்ட் அவரிடம் ஏன் என் மனைவி மீது டார்ச் லைட் அடித்துப் பார்த்தாய் என்று அவரை அடிக்க சொல்வதுபோல் தட்டி கேட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அருகில் இருந்தவர்களும் டார்ச் லைட் அடுத்தவரை தட்டிக் கேட்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த கிதியோன் சிறிது நேரம் கழித்து தனது நண்பர்களை அழைத்து வந்து வின்சென்ட் என்பவரை கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறபடுகிறது.இதில் பலத்த காயமடைந்த வின்சென்ட் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.