திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பசிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
திகார் சிறையில் முதலிரவு! ப.சிதம்பரத்திற்கு என்னென்ன வசதிகள் தெரியுமா?

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார். எனவே அவருக்கு இசட் கேட்டகிரி பாதுகாப்பு உண்டு. இந்த பாதுகாப்பு வசதி கொண்டவர்கள் சிறைக்கு சென்றால் சில வசதிகள் செய்து தரப்படும்.
அதன் படி ப.சிதம்பரத்திற்கு சிறையில் தனியாக ஒரு அறை கொடுக்கப்படும். அவர் அறையில் தங்க யாருக்கும் அனுமதி கிடையாது. மேலும் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு முன்பு பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பர்.
மேலும் சிதம்பரத்திற்கு ஒரு கட்டில் கொடுக்கப்படும். வழக்கமாக சிறைவாசிகள் என்றால் தரையில் தான் படுக்க வேண்டும். இசட் கேட்டகிரி பாதுகாப்பு கொண்டவர் என்பதால் கட்டில் அனுமதிக்கப்படும்.
சிதம்பரம் கேட்டுக் கொண்டதால் வெஸ்டர்ன் ஸ்டைல் டாய்லெட் வசதியுடனான அறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்துகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். சாப்பாட்டை பொறுத்தவரை மற்ற சிறைவாசிகளை போல் ரொட்டி தான்.
ஆனால் சிறைக் கேண்டீனில் சாப்பிட சிதம்பரத்திற்கு அனுமதி அளிக்கப்படும்.