இந்தியாவின் பணக்கார அரசியல் கட்சிகள்! முதல் 3 இடங்களுக்குள் திமுக - அதிமுக! எவ்வளவு சொத்து தெரியுமா?

டெல்லி: நாட்டிலேயே திமுக, அஇஅதிமுக மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் பிராந்திய அளவில் பெரும் பணபலத்துடன் வலம் வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது.


இந்திய அளவில் தேர்தல்களை கண்காணிக்கும் தனியார் தொண்டு நிறுவனமான ADR எனப்படும் அசோஷியேன் ஆஃப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2017-18 கால கட்டத்தில், நாட்டில் உள்ள பிராந்திய கட்சிகளில் அதிக சொத்துகள் கொண்ட கட்சியாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி உள்ளது.

அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு மட்டும் ரூ.583.29 கோடியாகும். இதற்கடுத்தப்படியாக, திமுக ரூ.191.64 கோடி மதிப்புடைய சொத்துகளைப் பெற்று, 2வது இடத்திலும், அஇஅதிமுக ரூ.189.54 கோடி மதிப்புடைய சொத்துகளுடன் 3வது இடத்திலும் உள்ளன.

இவை அனைத்தும் முறைப்படி வருமான வரிக்கணக்கு மற்றும் சட்ட ரீதியான ஆவணங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்ட தகவலாகும். கணக்கு காட்டாமல் இன்னமும் அதிக சொத்துகள் இக்கட்சிகளுக்கு இருக்கலாம் என, ADR குறிப்பிட்டுள்ளது.  

சமூக ஊடகங்களில், திமுக ஆதரவு சத்தம் அதிகமாக இருப்பதற்கு இதுதான் காரணம் போலும்...