ஆஸ்கர் விருது பரிந்துரை! இந்திக்கே முன்னுரிமை! புறக்கணிக்கப்படும் தமிழ் படங்கள்!

உலகிலேயே அதிக சினிமாக்கள் தயாரிக்கும் நாடு இந்தியா!


இங்கே வருடத்துக்கு கிட்டத்தட்ட 1000 படங்கள் தயாரிக்கப்படுகின்றன.அதில் எத்தனையோ நல்ல உலகத்தரமான படங்களும் எடுக்கப்படுகின்றன. ஆனால் நாம் வழக்கமான நமது பொது புத்திக்கு பிடித்த செண்டி மெண்ட் குப்பைகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறோம். கமலஹாசன் ஒருமுறை சொன்னார், 'ஆஸ்கருக்கு தசாவதாரத்தை அனுப்பினால் சிரிப்பார்கள்.ஆனால் பருத்தி வீரனை அனுப்பினால் வாயைப் பிளந்துகொண்டு பார்ப்பார்கள்' என்று. அதில் உண்மை இருக்கிறது.

நாம் வல்லரசுக் கனவில் இருந்தாலும் மேற்குலகம் இந்தியாவை பாம்பாட்டிகளும்,யானைகளும்,மகாராஜாக்களும் வாழும் நாடு என்றுதான் நினைக்கிறது. அதிலும் ஆவரேஜ் அமெரிக்க சினிமா ரசிகனின் உலக அறிவு அசாதாரணமானது.நமது இந்தி வாலாக்களுக்கு எப்படி விந்தியத்துக்கு தெற்கே ஒரே ஒரு மத்திராஸ் ஸ்டேட் மட்டும் இருக்கிறதோ அப்படி அவர்களுக்கு அமரிம்காவுக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதே தெரியாது.

அவர்கள் தரும் ஆஸ்கரால் பணப்பயன் ஏதுமில்லை. வீன் பெருமை மட்டும்தான்.அதற்கு ஒரே வழி அவர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டுவதுதான் .அவத்கள் பார்க்காத உலகை காட்டினால் வெல்லலாம் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் வென்ற ஒரே படமான ஸ்லாம் டாக் மில்லியனர் வெற்றியில் பெரும் பங்கு தாராவி என்கிற உலகின் மிகப்பெரிய சேரிக்குதான் போய் சேர வேண்டும்.

இந்த ஆண்டு அதற்கு சரியான வாய்ப்பிருந்தது. ஆனால் நமது செலக்‌ஷன் கமிட்டி அறிவாளிகள் கல்லி பாய் என்கிற இந்திய ராப் பாடல் கவிஞனைப் பற்றிய படத்தை தேர்வு செய்திருக்கிறார்கள். இதை நம்ம ஊர் விக்கிரமன் புதுவசந்தம் என்ற பெயரில் எப்போதோ எடுத்து விட்டார். அது இந்திப்படம் என்பதைத் தவிர அதற்கு வேறு தகுதிகளே இல்லை.ஆனால் கடந்த ஆண்டில் இன்னொரு நல்ல படம் வந்தது.

அதன் பெயர் ஆர்ட்டிக்கிள் 15 !.இந்திய சமூகத்தில் புறையோடிக்கிடக்கும் ஜாதி அமைப்பை நார் நாராகக் கிழித்தெரிந்த படம்.மத,இண,ஜாதி,பாலின வேற்றுமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியபடம்.இதை அனுப்பி இருந்தால் ஒரு வேளை வென்றிருக்கக் கூடும்.ஆனால்,வருடத்தில் பாதிநாள் வெளிநாட்டிலேயே இருக்கும் நமது பிரதமர் அங்கும் பிரஸை சந்திக்க முடியாமல் போயிருக்கும்.

அடுத்த படம் சூப்பர் 30.இதுவும் இந்திப் படம்தான்.ஆனால் JEE- IIT தேர்வுகளில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் எப்படிப் போராடி வெல்கிறார்கள் என்று சொன்னது.இதை அனுப்பினாலும் சிக்கல்.அடுத்தது ஹமீத் என்கிற உருதுப் படம்.போன் நம்பர் 786 என்கிற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.படத்தின் நாயகன் தெல்ஹா அர்ஷத் ரேஷி என்கிற காஷ்மீரிச் சிறுவன்.

இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது பெற்றவன் . அந்த தகவலை அவனுக்குச் சொல்லவே பத்து நாள் ஆகிவிட்டது.மோடியின் ஆர்டிகிள் 375 சாகசத்தால். இந்த படம் நிச்சயம் வென்றிருக்கும்.இல்லாவிட்டாலும் உலகெங்கும் கவனம் ஈர்த்திருக்கும்

காரணம் கதை அப்படி,காணாமல் போன தன் தந்தையோடு பேச வேண்டும் என்பதால் கடவுளின் தொலை பேசி எண்ணான 786க்கு டயல் செய்கிறான்.அது நமது தகவல் தொழில் நுட்ப தொழில் முன்னேற்றத்தின் காரனமாக இந்திய ரிசர்வ் போலீஸ்காரன் அபய் என்பவனுக்கு போகிறது. இப்படிபட்ட படங்களை அனுப்பினால் இந்தியாவின் இமேஜ் பாதிக்கப்படும் என்பதாலும்,ஏற்கனவே ஆஸ்கர் வென்ற தாராவி ஸ்லம் இதிலும் வருவதாலும் கல்லி பாயை அனுப்பி இருக்கிறார்கள்.