டிரைவர் ஆயில் ராஜாவுக்கும் மாதவனுக்கும் சண்டை! இடையில் உடைந்ததோ தீபாவின் மண்டை! வெளியானது வைரல் ஆடியோ!

சென்னை: ''என்னையும், என் கணவரையும் டிரைவர் ராஜா கொல்ல பார்க்கிறார்,'' என்று ஜெ.தீபா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா, தனியாகக் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆனால், அவரால் எதிர்பார்த்த வெற்றி எதுவும் ஈட்ட முடியாததால், சமீபத்தில் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.  மேலும், என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம், மீறி தொந்தரவு செய்தால் போலீஸ்க்குப் போவேன், என்று தீபா கூறியிருந்தார். 

இந்நிலையில், தனது உயிருக்கு, தன்னிடம் டிரைவராக பணிபுரிந்த ராஜாவால் ஆபத்து உள்ளதாகக் கூறி, தீபா புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ''அதிமுகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகள் தீபா பேரவையில் இணைந்துவிட்டதால், சிலர் என்னை அடிக்கடி மிரட்டி தொந்தரவு செய்கிறார்கள்.

ஒரு 6 பேர் ஒன்றாக சேர்ந்து தனிப்பட்ட முறையில் என்னை டார்ச்சர் செய்வதையே வேலையாக வைத்துள்ளனர். குறிப்பாக, என்னைச் சுற்றி வந்து, என்கூடவே இருந்து நம்பிக்கையின் பெயரில் என்னை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி, மிகப்பெரிய சூழ்ச்சி செய்து, என் கட்சியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய நபர்தான் டிரைவர் ராஜா.

அவரை நான் வேலைக்கு வைத்திருந்த காலத்தில், எனக்கே தெரியாமல் கட்சியை அவர் பாழாக்கிவிட்டார். ராஜா மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் எனக்கும், எனது கணவர் மாதவன் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அவர்கள் மீது விரைவில் உரிய ஆதாரங்களுடன் போலீசில் புகார் கொடுப்பேன்,'' என்று தீபா தெரிவித்துள்ளார்.