என் நண்பனுக்கு ஒரே ஒரு முத்தம் கொடு! போட்டோ எடுத்து காதலியை மிரட்டிய காதலன்! சென்னையில் ஒரு பொள்ளாச்சி பயங்கரம்!

சென்னை மடிப்பாக்கத்தில் பொறியியல் மாணவியை காதலிப்பதுபோல நடித்து புகைப்படங்களை எடுத்த காதலனையும், அவனது நண்பனையும் சுயரூபத்தை அறிந்து அந்த மாணவி காவல் துறையில் சிக்க வைத்துள்ளார்.


தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் அந்த மாணவிக்கும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த கல்லூரி மாணவன் ஸ்ரீநாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் மாணவியை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற ஸ்ரீநாத், கல்லூரிக்குச் செல்லாமல் மாமல்லபுரத்தில் ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. 

அங்கு ஸ்ரீநாத் மாணவியுடன் நெருக்கமாக இருந்ததை மற்றொரு மாணவனான யோகேஷ் என்பவன் படம் பிடித்துள்ளான். இந்நிலையில் வீட்டுக்கு வந்த மாணவிக்கு வந்த வாட்ஸ் அப் மெசேஜில், மாணவியும் ஸ்ரீநாத்தும் நெருக்கமாக இருந்த புகைப்படம் வந்திருந்தது. இது குறித்து மாணவி கேட்ட போது நேரில் வந்தால் அந்தப் படத்தை அழித்துவிடுவதாக ஸ்ரீநாத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனை நம்பி நேரில் சென்ற மாணவியும் ஸ்ரீநாத்தும் மீண்டும் நெருக்கமாக இரூந்ததை யோகேஷ் படம் பிடிக்க அந்தப் படங்களைக் கொண்டு இருவரும் மாணவியை தொடர்ந்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவி நடந்த விவரங்களை கண்ணீருக்கிடையே தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் தென்சென்னை காவல் இணை ஆணையர் மகேஸ்வரியிடம் மகளுடன் சென்று புகார் அளித்தனர். 

அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ஸ்ரீநாத்தையும், யோகேஷையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் இருவரால் வேறு எவரும் பாதிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார், மாணவி அஞ்சாமல் தைரியமாக புகார் கொடுத்ததால் பொள்ளாச்சி  சம்பவம் போன்ற மற்றொரு நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.