பெத்த மகனுக்கு சொல்லிக் கொடுக்குற விஷயாமாடா இது? தந்தையின் விபரீத செயல்!

தனது 3 வயது மகனின் கையில் துப்பாக்கியை கொடுத்து பயிற்சி கொடுக்கும் தந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது.


மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் தித்வாலா என்ற ஊரில் பள்ளிக்கூடம் நடத்தி வரும் அதிபர் ஒருவர், துப்பாக்கியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது உறவினர் ஒருவரின் துப்பாக்கியை அவரது 3 வயது மகன் கேட்கவே அதை கொடுக்கும் அந்த அதிபர் தோட்டாக்களை எப்படி செருகவேண்டும் என்பது குறித்து மகனுக்கு பயிற்சி அளிக்கிறார்.

இந்த வீடியோ எனது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி போலீசாரின் கவனத்திற்கு சென்றது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்தத் தொழில் அதிபரை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் இரண்டாவதாக அந்த தொழிலதிபர் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் தனது மகன் தொடர்ந்து அழுது கொண்டிருந்த காரணத்தால் துப்பாக்கியை கொடுத்ததாகவும் தான் செய்தது போன்று பிற எந்த பெற்றோரும் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தான் செய்த மிகப்பெரிய தவறு என்பது தற்போது புரிந்து கொண்டதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த வீடியோவில் தொழிலதிபர் தெரிவித்திருந்தார். இதை சுட்டிக் காட்டியுள்ள போலீசார், தற்போது அந்த தொழிலதிபர் டெல்லி சென்று இருப்பதாகவும் மும்பை திரும்பிய பின்னர் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.