கணவனுடன் படுக்கையறையில் இருந்த 2வது மனைவி! திடீரென நுழைந்த மாமனார் செய்த அதிர வைக்கும் செயல்!

மும்பையில் தந்தையை மீறி மகன் இரண்டாவது திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த தந்தை முதலிரவு அன்றே மகனை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.


மும்பையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது தந்தையின் எதிர்ப்பையும் மீறி தனது கள்ளக்காதலியை திருமணம் செய்த மகனை முதலிரவன்றே கொடூரமாக கொலை செய்த தந்தை இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தோண்டிராம் கெய்க்வார்ட் (80) என்பவரின் மகன் மகன் மிலிண்ட் (50).

இவருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் இவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை அவரது மனைவி பலமுறை கண்டித்த நிலையிலும் இந்த தொடர்பை வருகை விடுவதாக தெரியவில்லை. இதையடுத்து தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கள்ளக்காதலியை இரண்டாவதாக மணமுடிக்க மிலிண்ட் முடிவு செய்துள்ளார். 

இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது அது அவரது தந்தை கெய்க்வார்ட்க்கு பிடிக்கவில்லை பலமுறை எச்சரித்தும் கண்டுகொள்ளாமல் இரண்டாவதாக திருமணம் செய்து இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

இந்நிலையில் முதலிரவன்று இருவரும் தனி அறையில் இருந்த போது ஆத்திரமடைந்த கெய்க்வார்ட் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கட்டையை எடுத்து அவரது மகன் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அதைப்பார்த்த அருகில் இருந்த அவரது மனைவி கூச்சலிடத் தொடங்கினார்.

மிலிண்ட் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது. ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் பின்னர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு சென்று அவரது தந்தை தான் செய்த கொலையை ஒப்புக்கொண்டு சரணடைந்தார்.அவரை கைது செய்த காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.